இரண்டாக உடைந்த மொரிஷியஸ் எண்ணெய் கப்பல்!

இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவு நாடான மொரீஷியஸில் பல நாட்களாக நின்றிருந்த கப்பல் இரண்டாக உடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 25ம் தேதி, பவளப்பறைகள் மேல் மோதி உடைந்து நின்ற அந்த கப்பல் எண்ணெயை கசிய விட்டுக் கொண்டிருந்தது. பல்வேறு மீட்ப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் அக்கப்பல் தற்போது இரண்டாக உடைந்து மேலும் பல டன் எண்ணெயை கடலில் கசிய விட்டுக்கொண்டிருக்கிறது.


இதனால் அங்கிருக்கும் கடல்வாழ் உயிரினங்கள், பவளப்பாறைகள் மற்றும் கடல் சூழலுக்கே மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்றான அந்த இடம், சரியாவதற்கு ஓராண்டாவது ஆகும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதில் 4,290 டன் கந்தக எரிபொருள் எண்ணெய், 228 டன் டீசல் மற்றும் 99 டன் லூப்ரிகேஷன் எண்ணெய் ஆகியவை அடங்கும். இந்த கப்பல் சீனாவிலிருந்து பிரேசிலுக்கு சென்று கொண்டிருந்த கப்பலாகும்.


15ம் தேதி மாலை 4.30 மணியளவில், கப்பலின் முன்னோக்கிய பாகம் உடையத்தொடங்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த சில நாட்களில் 4.5 மீட்டர் உயரம் கொண்ட அலைகள் வர வாய்ப்புள்ளதாகவும் வானிலை மோசமாகும் என வானிலை ஆய்வார்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு இன்னும் பதற்றம் அதிகரித்துள்ளது. எண்ணெயை சுத்தம் செய்யும் பணி மிகவும் துரிதமடைந்துள்ளது.

Exit mobile version