என்ன உயிரினம் இது?

அடையாளம் தெரியாத 15 அடி நீளமுள்ள ஒரு உயிரினத்தின் எச்சங்கள் பிரிட்டனின் Aizandale கடற்கரையில் கரை ஒதுங்கியது.  இது என்ன உயிரினம் என்று யாரும் யூகிக்க முடியாத வகையில் சிதைந்துள்ளது. இதனால் நெட்டிசென்கள் சமூக வலைதளங்களில் கேள்விகளால் துளைத்து வருகின்றனர். யானையா?  திமிங்கலமா?  அல்லது வேறு எதாவது உயிரினமாக என பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


மர்மம் நிறைந்த இந்த புகைப்படம் சில நாட்களுக்கு முன்னிருந்து சமூகவலைதளத்தில்  பகிரப்பட்டு வருகிறது. யானை போன்று அல்லது திமிங்கலம் போல இருந்தாலும் இதற்கு flippers எனப்படும் ஆமைகளுக்கு இருப்பது போன்ற நீந்த கூடிய உறுப்பு உள்ளது. இதனால் ஒரு தெளிவின்மை அதிகரிக்கிறது. இந்த புகைப்படங்களை ஆராய்ந்த உயிரியல் வல்லுனர்கள் சிலர் இது பார்ப்பதற்கு குதிரை மாதிரி இருந்தது. ஆனால் இதன் அளவு 15அடிக்கு மேல் இருப்பதாக தெரிந்தவுடன் சந்தேகம் வலுக்கிறது. இதன் பாகங்கள் கிடைத்த பின் தான் தெளிவாக ஆராய்ந்து கூற முடியும் என தெரிவித்துள்ளனர்.

Exit mobile version