
நாம் நினைத்ததை விட அதிகளவு பிளாஸ்டிக் பொருட்கள் அட்லாண்டிக் பெருங்கடலில் குப்பையாக இருப்பது சமீபத்திய ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. கண்ணுக்குத் தெரியாத மைக்ரோ பிளாஸ்டிக் வகை கிட்டத்தட்ட 200கோடி டன் வரை கடலில் இருக்கிறது. இது நாம் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ள 3 வகை பிளாஸ்டிக்கில் ஒரு வகை தான். பிளாஸ்டிக்கின் அளவைப் பொறுத்து அவை 3 வகையாக பிரிக்கப்படுகின்றன .
கடந்த 65 ஆண்டுகளாக பிளாஸ்டிக்கின் அளவு இப்படித் தான் அளவிடப்படுகிறது . தற்போது கடலாய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் நாம் சரியான முறையில் கடலில் கிடக்கும் பிளாஸ்டிக்கை கணக்கிடுவதில்லை. நாம் நினைத்ததை விட 10மடங்கு அதிகமாக பிளாஸ்டிக் பொருட்கள் அங்கு இருக்கும் என தெரிவிக்கப்படுள்ளது.
நாம் இதுவரை 200 மீட்டர் வரை உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அளவீடாக வைத்தே மொத்த பிளாஸ்டிக் அளவையும் கணக்கிட்டு வந்தோம். ஆனால் 3000 மீட்டர் ஆழத்தில் இன்னுமும் அதிக அளவு பிளாஸ்டிக் இருக்க வாய்யப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 200டன் பிளாஸ்டிக் கடலில் சேர்ந்திருக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
