
மாற்றம் ஒன்றே மாறாதது. பலஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் நடவடிக்கைகள் திடீரென மாறும்போது அதை பின்பற்றுவது சற்று கடினமாகவே இருக்கும். ஆனால் தொழில்நுட்பம் வளரவளர புதிய நடைமுறைகளும் உருவாகிக்கொண்டே இருக்கும். இதற்கு சான்றாக தற்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நடக்கவிருக்கிறது. 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கிலோ எடை என்பது எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை பாரிஸில் இருக்கும் ஒரு உலோகத்தின் அடிப்படையிலேயே வடிவமைக்கப்பட்டு வந்தது.
தற்போது மின்காந்தவிசையினை அடிப்படை அலகாக கொண்டுவரவுள்ளனர் விஞ்ஞானிகள். International System Of units எனப்படுவது எடை, நீளம், வெப்பநிலை, மின்னோட்டம் மற்றும் மேலும் பலவற்றை அளக்கப் பயன்படுத்தப்படும் அலகுகலாகும். உலகெங்கிலும் அறிவியலாலர்கள் இந்த அலகுகளையே அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகளை நிகழ்த்தி வருகின்றனர்.உலகின் பல முன்னேறிய நாடுகளும் இந்த முறையையே பின்பற்றிவருகின்றன.
1790களில் பிரெஞ்ச் புரட்சியின் போது மெட்ரிக் அளவு முறை பின்பற்ற ஆரம்பிக்கப்பட்டது. அதனை அடிப்படையாக வைத்தே System of Insternational Units எனப்படும் S.I.System முறை உருவாக்கப்பட்டது. கிலோகிராம், செகண்ட், மீட்டர் என்பன போன்ற ஏழு அடிப்படை அலகுகள் உலகம் முழுதும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. ஒவ்வொரு அலகுக்கும் எதாவது ஒரு பொருளை அடிப்படையாகக்கொண்டு அதன் அளவுகள் இயற்றப்பட்டது. இதில் நமக்கு பெரிதும் பரிட்சையமான கிலோ கிராம் எனப்படுவது நிறைக்கான அலகாக கருதப்படுகிறது. 1000கிராம் ஒரு கிலோஆகும். 1795ம் ஆண்டில் கிலோ கிராமின் அளவு வரை முறைபடுத்தப்பட்டது. உருகும் நிலையில் இருக்கும் ஒரு கனசெண்டிமீட்டர் அளவுள்ள பனிக்கட்டியின் எடை கிலோகிராம் என நிர்ணயிக்கப்பட்டது. அதன் எடை பிளாட்டினம் உலோகத்தால் உருவாக்கப்பட்டு paris நகரில் பாதுகாக்கப்பட்டுவருகிறது.
வெப்பநிலை மாறினாலோ, ஈர்ப்புவிசையில் மாற்றம் ஏற்பட்டலோ உலோகத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ அது பாதிப்புக்குள்ளாகும். எனவே அந்த பிரச்சினையை போக்குவதற்காக புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் விஞ்ஞானிகள்.
தற்போது புதிய முறையில் ஒரு கிலோவுக்கான அலகை நிர்ணயிக்கவுள்ளனர். Plancks Scale எனப்படும் இம்முறையின் மூலம் மின்காந்தவிசையைப் பயன்படுத்தவுள்ளனர். உலகின் எந்த விதமான சூழ்நிலைகளிலும் இதன் அளவு மாறாது. எந்த பகுதிகளிலும் எந்தகால நிலைகளிலும் இதனை பயன்படுத்தலாம். இதன் மூலம் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும்நடைமுறையில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன. ஆரம்பகட்டத்தில் ஒரு மில்லிகிராம் முதல் 100கிராம் வரையே அளக்க முடியும் என்றும் கூடிய விரைவில் 1000கிராம் வரை அளக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர். நாம் தற்போது வரை பயன்படுத்திவரும் ஒரு கிலோகிராம் எடையுடன் இந்த மின்காந்தவிசையை பயன்படுத்தும் Planck Scale முறை மிகச்சரியாக பொருந்துகிறதா என்பதை உறுதிபடுத்துவதற்காக பல சோதனைகளையும் விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.
ஜெர்மனியைச் சேர்ந்த Techical University iLmenau இதனை உருவாக்கிவருகிறது. இது தொழிற்சாலைகள் மற்றும் பெருநிறுவனங்களில் பல பயனுள்ளமாற்றங்களை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
