நெருப்பை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை மனிதர்கள் எப்போது கண்டுபிடித்தார்கள்?

இன்று மனிதர்கள் மற்ற விலங்குகளை விட முன்னேறிய நாகரிகமாக இருக்கக் காரணம் நெருப்பு. நெருப்பு தான் நம்மை வழிநடத்தி வந்திருக்கிறது. மனிதன் அதிகம் சிந்திக்க ஆரம்பித்த போது ஆற்றல் தேவைப்பட்டது. அதற்காக அவன் அதிகமாக சமைத்த உணவை உண்ண ஆரம்பித்தான். அதற்கு நெருப்பு இன்றியமையாததாக இருந்துள்ளது. நெருப்பை நாம் கட்டுப்படுத்தியதால் தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளோம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். 

நெருப்பை நாம் எப்போது நமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தோம்?

 “இது ஒரு தந்திரமான கேள்வி” என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதற்கான மிகத் தெளிவான சான்றுகள் நமக்கு கிடைக்கவில்லை. இறுதியில் இருந்த பொருட்களின் எச்சமே நமக்கு ஆதாரமாக இருக்கின்றன. அனைத்தும் ஒரு யுகம் தான் என்கின்றனர். வல்லுநர்கள் அறிந்திருப்பது என்னவென்றால், சுமார் 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க மற்றும் ஆசியா முழுவதிலும் உள்ள தொல்பொருள் பதிவுகளில் தீ அடிக்கடி தோன்றத் தொடங்கியது தெரியவருகிறது. எனவே அக்காலகட்டத்தில் அடிக்கடி நெருப்பை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

 ஆனால்  இரண்டு தொல்பொருள் ஆய்வு தளங்கள் 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே நெருப்பு பயன்படுத்தி இருப்பதற்கான ஆதாரங்களை காட்டுகின்றன. இஸ்ரேலில் ஒரு தளத்தில், சுமார் 8 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அடுப்புகள், தீ பந்தம்  மற்றும் மர துண்டுகளை கண்டுபிடித்துள்ளனர்.

தென்னாப்பிரிக்காவின் ஒரு தளமான Wonderwerkல் 10லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய நெருப்பை பயன்படுத்திய ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளனர்.  அந்த குகையில், எரிந்த எலும்பு மற்றும் தாவரங்களின் எச்சங்கள் மற்றும் அடுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 மனிதர்கள் ஆரம்பகாலத்தில் நெருப்பைப் பயன்படுத்தியதாக பெரும்பாலான வல்லுநர்கள் ஒப்புக் கொள்வது வொண்டர்வெர்க் தளத்தை தான்.

Exit mobile version