இந்த தேனீக்கள் மட்டும் ஏன் இப்படி கூடு கட்டுகிறது?

ஆஸ்திரேலியாவின் டெட்ராகோனுலா (Tetragonula) இன தேனீக்கள் விசித்திரமான, சுழல் வடிவ கூடுகளை உருவாக்குகின்றன. பார்க்கவே ஓவியம் போல, பொறியியல் கலந்த கட்டுமானம் போல, பிரமிக்கத்தக்க வகையில் Spiral Staircase எனப்படும் சுழல் படிக்கட்டு வடிவில் இருக்கும். இதற்கான காரணம் என்னவாக இருக்க முடியும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உலகம் முழுவதும் அறுகோண வடிவ தேன் கூடுகள் மட்டுமே காணப்படும் நிலையில் இந்த ஆஸ்திரேலிய தேனீக்கள் மட்டும் ஏன் இந்த சுழல் வடிவத்தை தேர்வு செய்தன?

வழக்கம் போலவே இந்த கூட்டிலும் ராணி தேனீ இடும் கட்டளைகளை வேலைக்கார தேனீக்கள் செய்து முடிக்கும். ஒரு வேளை ராணி தேனீ இவற்றுக்கு வித்தியாசமான கட்டளையை தருகிறதா என ஆராய்ந்தால் அப்படி எதுவும் இல்லை. மற்ற தேன்கூடுகளைப் போல் தான் இவையும் செயல்படுகின்றன.

எனவே, டெட்ராகோனுலா தேனீக்கள் பூச்சி உலகின் வித்தியாசமான கட்டுமான நிபுணர்கள் ஆனது எப்படி? ஒவ்வொரு வேலைக்கார தேனியும் தனித்தனியாக குறிப்பிடப்பட்ட கட்டிட விதிகளின் அடிப்படையில் செயல்படுகிறதா? இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் இதற்கான பதில் படிகங்கலாக (Crystal) இருக்கலாம் என கருதுகின்றனர். படிகங்கள் எப்படி உருவாகின்றனவோ அதே அடிப்படையில் தான் இந்த தேன்கூடுகளும் அமைந்துள்ளன. ஒவ்வொரு தேனியும் அடிப்படையில் ஒரு வழிமுறையைப் பின்பற்றுகிறது என தெரிவிக்கின்றனர் விஞ்ஞானிகள்.இந்த வடிவங்களை உருவாக்க ஒரு தேனி எந்த வகையான தகவல்களைக் கொண்டிருக்கும்?


Digital Simulation முறையில் கணினியின் உதவியோடு இவர்கள் பல வழிகளில் தேன் கூடுகளை கட்ட முயன்றனர். படிகங்களின் அமைப்பையும் முயற்சி செய்ததில்.அது வெற்றியடைந்தது.

Exit mobile version