உலகின் மக்கள் தொகை குறையவுள்ளது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல்


நவீன கருத்தடை முறைகள் குறித்த அணுகுமுறை, பெண்கள் மற்றும் பெண்களின் கல்வியில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகள் காரணமாக இன்னும் சிறிது காலத்தில் உலக மக்கள் தொகை கணிசமான அளவு சரிவை சந்திக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 2064 ஆம் ஆண்டில் உச்சபட்சமாக சுமார் 9.7 பில்லியனாக மக்கள் தொகை உயர்ந்திருக்கும் என்றும் , பின்னர் சரியத் தொடங்கி 2100 ஆம் ஆண்டில் சுமார் 8.8 பில்லியனாக குறையும் என்றும் தெரிவித்துள்ளனர். இது முந்தைய  மதிப்பீடுகளை விட சுமார் 2 பில்லியன் குறைவு  

 புதிய ஆய்வின்படி இந்த மக்கள் தொகை சுருங்குதல் நிகழ்வு என்பது ஆசிய மற்றும் மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக இருக்கும். குறிப்பாக ஜப்பான், தாய்லாந்து, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட 23 நகரங்களில் மக்கள் தொகை பாதியாகக் குறைந்திருக்கும். சீனா உட்பட 24நாடுகளில் மக்கள் தொகை24 சதவிகிதம் வரை குறைய வாய்ப்புள்ளது. கருவுறுதல் குறைவதாலும், சராசரி நபரின் வாழ்நாள் அதிகரித்து வருவதாலும் 2100ம் ஆண்டில் 5வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை விட 80வயதானவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இந்தியர்களுக்கு சற்று நிம்மதியான செய்தியும் அடங்கியுள்ளது. உழைக்கும் மக்கள் தொகையின் அளவு பல நாடுகளிலும் குறைந்திருக்கும் எனவும் இந்தியாவில் மட்டும் தான் தற்போது இருக்கும் 760 மில்லியனாக இருக்கும் உழைக்கும் மக்கள் தொகை சற்றே குறைந்து 580 மில்லியனாக இருக்கும். ஆசியாவிலே உழைக்கும் மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடாக இந்தியா இருக்கும். அதுவும் சீனாவை வீழ்த்திவிட்டு இந்தியா முன்னணியில் இருக்கும் என்பது கூடுதல் செய்தி.

Exit mobile version