மேலும் பிரம்மாண்டமாகிறது ஐபிஎல் தொடர்.. கூடுதலாக வரப்போகும் அணி?

அடுத்த ஐபிஎல் தொடரில் புதியதாக, மேலும் ஒரு அணி இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர், உலக அளவில் அதிக வருமானம் ஈட்டும் தொடர்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இதன் 13வது சீசன் நேற்றுடன் முடிவடைந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஐக்கிய அரபு அமீரகத்தில் பயர்வையாளர்கள் இன்று இந்த தொடர் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, 2021ம் ஆண்டிற்கான அடுத்த ஐபிஎல் தொடர் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்க்கான வீரர்களின் ஏலம் வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த ஏலம் சிறிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முழு அளவிலான ஏலமாக இது மாறக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, அடுத்த ஐபிஎல் தொடரில் கூடுதலாக ஒரு அணியை இணைக்க ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தை மையப்படுத்தி 9வது அணியாக சேர்க்க உள்ளதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் ஏற்கனவே, கொச்சி டஸ்கர்ஸ் மற்றும் புனே வாரியர்ஸ் போன்ற கூடுதல் அணிகள் சேர்க்கப்பட்டு, பிறகு பல்வேறு காரணங்களால் அவை நீக்கபட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version