பீல்டிங்கில் வயதானவர் போல செயல்படுகிறார் அஸ்வின் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நக்கலடித்துள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 578 ரன்கள் அடித்துள்ளது. அந்த அணியின் ஜோ ரூட் இரட்டைச் சதம் விளாசினார். மேலும் பென் ஸ்டோக்ஸ், டோம் சிப்லே ஆகியோர் அரைச தமடித்தனர். இந்தப் போட்டியில் இந்திய அணியின் பீல்டிங் மிக மோசமாகவே இருந்து என்றே சொல்ல வேண்டும்.
இங்கிலாந்து வீரர்களின் பல கேட்சுகளை இந்திய வீரர்கள் தவறவிட்டனர். இதற்கு பலரும் விமர்சனம் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் இதுபற்றி பேசியுள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மார்க் புட்சர் “அஸ்வின் மிகச்சிறந்த பீல்டர் இல்லை. அவர் பீல்டிங்கில் மிகவும் மெதுவாக செயல்படுவார். அவர் வயதைவிட 20 வயது அதிகமுடையவர் போலவே பீல்டிங் செய்கிறார் என்று கிண்டலடித்துள்ளார்.