இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான மூன்று வித கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையையும் பிசிசிஐ அறிவித்துள்ளது.
நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் முடிந்ததும், இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை, பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பல இளம் வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு அளிக்கப்ட்டுள்ளது. தற்போது, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான அட்டவணையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில் நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. ச
அதன்படி, முதலில் நடைபெற உள்ள ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகள் முறையே, நவம்பர் 27, 29 மற்றும் டிசம்பர் 2 ஆகிய தேதிகளில் விளையாடப்படும்.
அட்டவணை விவரங்கள் பின்வருமாறு:
முதல் ஒருநாள் போட்டி – சிட்னி-நவம்பர் 27 –
இரண்டாவது ஒருநாள் போட்டி – சிட்னி-நவம்பர் 29
மூன்றாவது ஒருநாள் – கான்பெர்ரா- டிசம்பர் 02
டீ ட்வெண்டி தொடர்:
முதல் 20 ஓவர்போட்டி – 04 டிசம்பர் – கான்பெர்ரா
இரண்டாவது 20 ஓவர் போட்டி – 06 டிசம்பர் – சிட்னி
3 வது 20 ஓவர் போட்டி – 08 டிசம்பர் – சிட்னி
டெஸ்ட் தொடர்:
முதல் டெஸ்ட் – 17 டிசம்பர் முதல் 21 டிசம்பர் வரை – அடிலெய்ட்
இரண்டாவது டெஸ்ட் போட்டி – டிசம்பர் 26 முதல் டிசம்பர் 30 வரை – மெல்போர்ன்
மூன்றாவது டெஸ்ட் போட்டி – ஜனவரி 07 முதல் ஜனவரி 11 வரை – சிட்னி
நான்காவது டெஸ்ட் போட்டி – ஜனவரி 15 முதல் ஜனவரி 19 வரை – பிரிஸ்பேன் ஆகிய தேதிகளில் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.