இந்த வருடம் ஐபிஎல் ஆடமாட்டேன்; டெல்லி அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் விலகல் !!

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு விளையாடி வந்த  கிறிஸ் வோக்ஸ் இந்த  வருடம் நடக்கும் ஐபிஎல் தொடரில் விளையாட போவதில்லை என முடிவு எடுத்திருக்கிறார்.
கிறிஸ் வோக்ஸ்

இதனால் டெல்லி அணி அவருக்கு மாற்று வீரராக தென்ஆப்பிரிக்கா அணியின் வீரரான அன்ரிச் நோர்டியாவை டெல்லி அணி தற்போது தேர்வு செய்துள்ளது. அடுத்த மாதம்  செப்டம்பர் 19ஆம் தேதி ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில்  தொடங்க உள்ளது. இந்த சீசனுக்கான ஏலம்  சென்ற ஆண்டு 2019 டிசம்பர் மாதம் கொல்கத்தாவில் நடந்து முடிந்தது. அதில் பல முன்னணி வீரர்கள்   பல கோடிகளில் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

இதில் குறிப்பாக டெல்லி அணி  பல முக்கிய வீரர்களை  ஏலத்தில் எடுத்து தங்கள் வசம்  வைத்திருந்தது அதில் ஒருவராக விளங்கியவர்  இங்கிலாந்து அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ்  ஆவார் இவரை சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு  டெல்லி ஏலத்தில் எடுத்தது ,தற்போது இவர் இங்கிலாந்து  அணிக்காக சிறப்பான  ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மற்றும் பாகிஸ்தானுடனான டெஸ்ட்  தொடரிலும்   இவரின்பந்துவீச்சு சிறப்பாக விளங்கியது  அதுவும் குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரே முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங்  மற்றும்  பவுலிங் இரண்டிலுமே ஜொலித்த இவர்ஆட்டநாயகன் விருது பெற்றார் இதைப்பற்றி அவர் கூறிய தகவல் பின்வருமாறு

இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருவதால் இங்கிலாந்து அணிக்காக எத்தனை நாட்கள் ஆட முடியுமோ அத்தனை நாள் ஆடுவேன் என்றும் மற்றும் டி20 தொடர் விளையாடுவதை விட எனக்கு இங்கிலாந்து அணிக்கு ஆடுவதுதான் மிகுந்த ஆர்வமாக உள்ளது தற்போது சிறந்த நிலையில்  உள்ளே எனது ஆட்டத்தை  மேலும் மேம்படுத்தும் வகையில் இங்கிலாந்து பங்குபெறும்சர்வதேச போட்டிகள் மட்டுமே  கவனத்தில் உள்ளன என்று தெரிவித்தார் .

அன்ரிச் நோர்டியா

தற்போது டெல்லி கேப்பிடல்  அணி ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய கிறிஸ் வோக்ஸ்க்கு மாற்று வீரரை தேடிவந்த நிலையில்  தென்ஆப்பிரிக்க அணியின் இளம் வீரர் அன்றிச் நோர்டியாவை தேர்ந்தெடுத்து அவரையே மாற்று வீரராக  அறிவித்துள்ளது. இவர் தென் ஆப்பிரிக்கா அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகள் 7 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குமுன் நடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இவர்  ஆடி இருக்கிறார்.

Exit mobile version