சென்னை அணியை தொடர்ந்து டெல்லி அணியிலும் இந்த பிரச்சனை?

பல  மாதங்களாக தள்ளி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல்  தொடர்நடத்தப்படுவது தற்போது உறுதியாகிவிட்டது. இதற்கான முழு அட்டவணையும் நேற்று வெளியிடப்பட்டது.

எனவே, திட்டமிட்டபடி ஐபிஎல் தொடர் முழுவதுமாக நடக்கும் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி  தெரிவித்திருக்கிறார்  பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்துவந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் தற்போது வரை பாதுகாப்பாக வீரர்கள்  மற்றும்பயிற்சியாளர்கள் என அனைவரையும் ஆகஸ்ட்  மாதத்திலேயே துபாய்க்கு கொண்டு வந்து  விட்டார்கள்.

அவர்கள்  எல்லோரையும் (BIO SECURE BUBBLE) உயிர் பாதுகாப்பு வளையம், என்ற கடுமையான கொரோனா வைரஸ் விதிமுறைகள் அதிகம் உள்ள ஒரு பாதுகாப்பு சூழலில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இதில் பல்வேறு விதிமுறைகள்  தற்போது கடைபிடிக்கப்பட்டு  வருகின்றன.  ஆனால்,இப்படி இருந்தும் கடந்த வாரம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில்  இருவீரர்கள் , உதவி ஆட்கள் உட்பட  மொத்தம் 13 பேருக்கு கொரோனா வைரஸ்  நோய்தொற்று  பரவியிருந்தது.  இதில்  உலகம் முழுவதும் உள்ளஐபிஎல்   ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஆனால் இதனை  எப்போதும் போல் எளிதாக  கையாண்ட பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் உடனடியாக சுதாரிக்க செய்து அனைத்து வீரர்களையும்  இன்னும் ஐந்து நாட்களுக்கு  தனிமைப்படுத்த உத்தரவிட்டார்கள். இதில்  சென்னை அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் மற்றும் பேட்ஸ்மேன் ருதுராஜ் ஆகிய இருவரும் கொரோனா வைரஸ்  நோய்தொற்று பாதிக்கப்பட்டு அவர்கள் இன்னும் அதிக நாட்கள் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டார்கள். இப்படியான நேரத்தில் தற்போது இது  டெல்லி அணியும் பாதித்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தற்போது டெல்லி கேப்பிடல் அணியில் பிசியோதெரபிஸ்டாக பணி புரியும்  ஒருவருக்கு  கொரோனா வைரஸ்  தாக்கியுள்ளது. இதனை டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நிர்வாகி  உறுதிப்படுத்தியுள்ளார் அவர்  இதைப்பற்றி தெரிவிக்கையில் …

எங்கள் அணியின்  துணை பிசியோதெரபி ஆக இருக்கும் ஒருவருக்கு வைரஸ் தொற்று  ஏற்பட்டுள்ளது.  அவருக்கு நாங்கள் மொத்தம் மூன்று முறை டெஸ்ட் எடுத்தோம். முதல் இரண்டு முறை நெகட்டிவ் என்று வந்தது  பின்பு மூன்றாவது முறை பாசிட்டிவ் என்று வந்துவிட்டது.எனவே, அவரை  நாங்கள் உடனடியாக தனிமைப் படுத்தி உள்ளோம் என்று கூறியிருக்கிறார் மேலும் அந்த அதிகாரி. டெல்லி கேப்பிடல் அணி  தற்போது மிகவும் திறமை வாய்ந்த இளம் அணியாக  கட்டமைத்து இருக்கிறோம். இந்த முறை  எங்கள்அணி கோப்பையை  வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்  உள்ளது என்று தெரிவித்தார்.

Exit mobile version