டெல்லியிடம் சிதறிய சென்னை :டெல்லி அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் 2வது வெற்றி

பிரித்வி சாவின் அதிரடி அரைசதத்தால் டெல்லி அணி ஐ.பி.எல் தொடரில் 2 வது வெற்றியை பெற்றது.

முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, டெல்லி அணியை பேட்டிங் செய்யுமாறு அழைத்தார்.

இதன்படி, சென்னை அணி முதலில் பந்து வீசியது. டெல்லி அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பிரித்வி ஷா, ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 94 ரன்களை குவித்தது. பிரித்வி ஷா 64 ரன்களில் சாவ்லா பந்தில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். ஷிகர் தவான் 35 ரன்கள் சேர்த்தார். டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை சேர்த்தது.

டெல்லி அணியில் அதிகபட்சமாக பிரித்வி சா 64 ரன்களும், பண்ட் 37 ரன்களும் ,தவான் 35 ரன்களும் எடுத்து இருந்தனர்.சென்னை அணியில் சாவ்லா 2 விக்கெட்களும்,ஷாம் கர்ர்ன் 1 விக்கெட்டும் கை பற்றி இருந்தனர்.

இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது.சென்னை அணி சார்பில் தொடக்க ஆட்ட வீரர்களாக முரளி விஜய் மற்றும் வாட்சன் மைதானத்தில் இறங்க வழக்கம் போல் இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.அடுத்து பெரிதும் எதிர்பார்க்க பட்ட டு பிளிசி மட்டும் ஓரளவு நிலைத்து நின்று ஆடி 43 ரன்களை சேர்த்து ரபடா பால்லில் விக்கெட் கீப்பர் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேற,அடுத்து தல தோனியும் 15 ரன்களுடன் இறுதி ஓவரில் அவுட் ஆகி நடையை கட்டினார்.சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 131 ரன்களை மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.டெல்லி 44 ரன்கள் வித்தியாசத்தில் ஐ.பி.எல் தொடரில் 2 வது வெற்றியை பெற்றது.

ஆட்ட நாயகனாக பிரித்வி சா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Exit mobile version