கார்க் அதிரடி 50: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 165 ரன்கள் இலக்கு

சன்ரைசரஸ் ஐதராபாத் அணியில் கார்க் மற்றும் அபிசேக் சர்மாவின் அதிரடியால் 165 ரன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலக்காக பெற்றது.
piriyam grag

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் தொடர் 14 ஆட்டத்தில் சன்ரைசரஸ் ஐதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து ஐதராபாத் அணி சார்பாக கேப்டன் வார்னர்,பேரிஸ்டவ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.தீபக் சகார் வீசிய முதல் ஓவரில் ரன்கள் எதுவும் எடுக்காமல் பேரிஸ்டவ் கிளீன் போல்ட் ஆகி நடையை கட்ட, அடுத்து களம் இறங்கிய மனிஷ் பாண்டே வார்னருடன் சேர்ந்து சிறப்பான தொடக்கம் தந்தார்.தொடர்ந்து அதிரடி காட்டிய மனிஷ் பாண்டே(29 ரன்கள்,21 பந்துகள்) சர்துல் தாகூர் வீசிய 7.1 வது பந்தில் சாம் கர்ர்னிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.அதே ஓவரில் வில்லியம்சன் வந்தவுடன் ஒரு பௌண்டரி அடிக்க 7.3 வது பந்தில் ஐதராபாத் அணி 50 ரன்களை கடந்தது.

மறுமுனையில் அடித்து ஆடிய வார்னர்(28 ரன்கள்,29 பந்துகள்) சாவ்லா வீசிய 11 வது ஓவரில் தூக்கி அடிக்க டு பிளிசி எல்லை கோட்டில் அற்புதமாய் கேட்ச் பிடித்து வெளியேற்ற,அதே ஓவரில் வில்லியம்சன்(9 ரன்கள்,13 பந்துகள்) 1 ரனுக்கு ஆசைப்பட்டு தேவை இல்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். ஐதராபாத் அணி 11 ஓவர் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 69 ரன்களுடன் தடுமாறியது.அடுத்து களம் இறங்கிய இளம் வீரர் அபிசேக் சர்மா ஜடேஜா வீசிய 14 வது ஓவரில் ஒரு பௌண்டரி,ஒரு சிக்ஸர் அடித்து அசத்தினார்.பிராவோ வீசிய அடுத்த ஓவரிலும் அபிசேக் ஒரு பௌண்டரி அடித்து ஐதராபாத் அணி 100 ரன்களை கடக்க உதவி செய்தார்.மறுமுனையில் இருந்த கார்க் தன் பங்கிற்கு சர்துல் தாகூர் பந்தில் ஒரு பௌண்டரியை ஓட விட,ஐதராபாத் அணி 16 ஓவர் முடிவில் 111 ரன்கள் எடுத்து இருந்தது.இருவரும் ஓரளவு அடித்து ஆட, ரன் விறுவிறுவென ஏறியது.கார்க் சாம் கர்ர்ன் வீசிய 17 வது ஓவரில் 2 பௌண்டரி,1 சிக்ஸர் அடித்து நொறுக்கினார்.

அடுத்து தீபக் சாகர் ஓவரில் அபிசேக் (31 ரன்கள்,24 பந்துகள்)அட்டகாசமாய் ஒரு சிக்ஸர் அடித்து,அதே ஓவரில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.மறுமுனையில் கார்க் அடி நொறுக்க 18.1 வது ஓவரில் ஐதராபாத் அணி 150 ரன்களை கடந்தது.சிறப்பாக ஆடிய கார்க் 23 பந்துகளில் 50 ரன்களை எடுக்க,20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 4 விக்கெட் இழந்து 164 ரன்கள் எடுத்து சென்னை அணிக்கு 165 ரன்கள் இலக்காக வழங்கியது.

பிரியம் கார்க் 51 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.

Exit mobile version