தோல்வியை மறந்து முன்னோக்கிச் செல்வோம்: ஸ்ரேயஸ் ஐயர்


ஐபிஎல் போட்டியில் நாங்கள் தோல்வியை முன்நோக்கி செல்ல வேண்டியது அவசியமானதாகும் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயர் ஐயர் தெரிவித்தார்.


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது.
தோல்வி குறித்து டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் கூறும்போது, ‘பஞ்சாப் அணியுடனான இந்த தோல்வி நாங்கள் விழிப்புணர்வுடன் செயல்பட விடுக்கப்பட்ட எச்சரிக்கை போன்றது என்று எண்ணுகிறேன். இனிமேல் நாங்கள் கடினமான சூழ்நிலையையும், சவால்மிக்க அணிகளையும் எதிர்கொள்ள இருக்கிறோம். கடந்த காலத்தில் மிகவும் அருமையாக விளையாடி இருக்கிறோம். அதனை மறந்து விட்டு நாங்கள் முன்நோக்கி செல்ல வேண்டியது அவசியமானதாகும். வரும் ஆட்டங்களில் நாங்கள் மிகவும் சுதந்திரமாகவும், அதிக பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்று எண்ணுகிறேன். அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற இன்னும் ஒரு ஆட்டத்தில் வெல்ல வேண்டும் என்பதை நாங்கள் மனதில் கொள்ள வேண்டும். ஷிகர் தவான் விளையாடி வரும் விதம் உற்சாகம் அளிக்கிறது” என்றார்.

Exit mobile version