டி காக்,சூர்ய குமார் யாதவ்வின் அதிரடியால் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 27 வது லீக் ஆட்டம் அபு தாபியில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்கியது.மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.அதனை தொடர்ந்து டெல்லி அணியில் தவானின் நிதான அரைசதத்தால் டெல்லி அணி 162 ரன்கள் அடித்து மும்பை அணிக்கு 163 ரன்கள் இலக்காக வழங்கியது.
163 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா,டி காக் வர,ரோஹித் 5 ரன்களில் மும்பை ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்க,டி காக் உடன் இணைந்த சூர்ய குமார் யாதவ் நிலைத்து நின்று ஆடினர்.மறுமுனையில் அதிரடி காட்டிய டி காக் 31 பந்துகளில் அரைசதம் அடிக்க,அஸ்வின் வீசிய 10 வது ஓவரில் டி காக்(53 ரன்கள்,36 பந்துகள்)தூக்கி அடிக்க பார்த்து பிரித்திவி சாவிடம் கேட்ச் ஆனார்.10 ஓவர் முடிவில் மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்து இருந்தது.சூர்ய குமார் யாதவ் அக்சார் பட்டேல் வீசிய 13 வது ஓவரில் தொடர்ந்து 2 பௌண்டரிகளை விரட்ட,13 ஓவர் முடிவில் மும்பை அணி 100 ரன்களை கடந்தது.அடுத்த ஓவர் வீசிய ஸ்டொய்னிஸ் பந்தில் இஷான் கிஷன் தன் பங்கிற்கு ஒரு சிக்ஸர்,ஒரு பௌண்டரியை ஓட விட,அதனை தொடர்ந்து ரபடா ஓவரில் சூர்ய குமார் ஒரு சிக்ஸர்,ஒரு பௌண்டரியை தெறிக்கவிட்டு 30 பந்துகளில் 50 ரன்களை கடந்தார்.
அதே ஓவரில் சூர்ய குமார்(53 ரன்கள்,31 பந்துகள்) தூக்கி அடிக்க பார்த்து எதிரணி கேப்டன் ஷ்ரேயாஸ் கைகளில் சிக்கினார்.அடுத்து களம் இறங்கிய ஹர்திக் பாண்டியா ஸ்டொய்னிஸ் பந்தில் ரன் எதுவுமின்றி வெளியேற,16 ஓவர் முடிவில் மும்பை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து இருந்தது.18 பந்துகளில் 18 ரன்கள் மும்பைக்கு தேவையாக இருக்க,இஷான் கிஷன்(28 ரன்கள்,15 பந்துகள்) ரபடா பந்தில் ஒரு சிக்ஸர் அடித்து அடுத்த பந்தே அவுட் ஆனார்.மும்பை அணிக்கு 6 பந்துகளில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில் ஸ்டொய்னிஸ் வீசிய முதல் பந்தே குர்னால் பாண்டியா ஒரு பௌண்டரி அடித்து ஒரு ரன் ஓட,பொல்லார்ட் அடுத்த பந்து ஒரு ரன் எடுத்தார்.3 பந்துகளில் 1 ரன் என்ற நிலையில் குர்னால் பாண்டியா ஒரு பௌண்டரி அடிக்க,மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை அணியின் ரன் வேட்டைக்கு முக்கிய காரணமாய் இருந்த டி காக்கிற்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
