டெல்லி கேப்பிட்டல்ஸ் ஐபிஎல் அணியில் இடம் பிடித்து உள்ள அமித் மிஸ்ராவுக்கு பதிலாக, கர்நாடகாவை சேர்ந்த புதிய வீரர் இணைந்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சிறப்பாக விளையாடி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த அணியில் இடம் பிடித்து ஸ்பின் பவுலர் அமித் மிஸ்ரா கடந்த 3-ம் தேதி ஷார்ஜாவில் நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங்கின்போது கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் ஐ.பி.எல். போட்டி தொடரில் இருந்து விலகினார் அமித் மிஸ்ரா.
இந்த நிலையில் அமித் மிஸ்ராவுக்கு பதிலாக டெல்லி அணியில் கர்நாடகாவை சேர்ந்த 27 வயது சுழற்பந்து வீச்சாளரான பிரவின் துபே இணைந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் பிறந்தவரான பிரவின் துபே தற்போது கர்நாடக மாநில அணிக்காக விளையாடி வருகிறார்.