எல்லா ஆட்டமும் எங்க பக்கம் தான் டெல்லி கேப்டன் சவால்!!

இன்னும் நான்கு நாட்களில் ஐபிஎல் தொடங்கஉள்ளன. வரும் சனிக்கிழமை உற்சாகமாக ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல் கோலாகலம் தொடங்க உள்ளது.

ஐபிஎல் அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கே கோப்பையை வெல்லும் வாய்ப்புஉள்ளது எனப் பலரும்  தெரிவித்துவருகிறார்கள். ஆனால்,  தற்போதைய ஐபிஎல் வர்ணனையாளரும்  முன்னாள் டெல்லி கேபிட்டல் அணியின்  ஆட்டக்காரரான கெவின் பீட்டர்சன், ‘டெல்லி  அணி கோப்பையை கைப்பற்றும் என கூறியுள்ளார்..

டெல்லி கேப்பிட்டல் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் இந்த அணியில் மார்கஸ் ஸ்டொனிஸ், ஷிகர் தவான், அஸ்வின்,, இஷந்த் ஷர்மா, ரெஹேனா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட திறமையான வீரர்கள் உள்ளார்கள். அணியின்  அனைத்து   பெரும் பலம் சேர்ப்பது  தற்போது ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங்  இதற்கு பயிற்சியாளராக உள்ளார்.

 இதற்கிடையே, டெல்லி கேப்பிடல் டீம் கேப்டன் ஸ்ரேயாஸ்  சமீபத்தில் அளித்துள்ள  ஒரு பேட்டியில், ‘  வரும் ஐபிஎல்  தொடரில் 14 போட்டிகளிலும் வென்று  புதிய சாதனை படைக்க  விரும்புவதாக கூறியுள்ளார்.

ஸ்ரேயாஸ் ஆசை மிகவும்  பேராசை யான ஒன்றுதான்.  ஏனென்றால், 2008  வருடம்தொடங்கி  தற்போது வரை   நடைபெற்று இருக்கும் ஐபிஎல்  போட்டிகளில்  ஒன்றில் கூட எந்த ஒரு அணியும் இதுபோல்  வென்றதில்லை.

 கடந்த 2008-ல்  நடைபெற்றமுதல் ஐபிஎல் போட்டியில் ஷேன் வார்னே கேப்டன்   ஆக கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 போட்டிகளில் ஆடி 11 வெற்றிகளைப்  பதிவு செய்தது.

 கடந்த 2012-ல்  நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் வீரேந்திர சேவாக்  கேப்டனாக கொண்ட  டெல்லி டேர்டெவில்ஸ் அணி 16 போட்டிகளில் ஆடி 11 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.

கடந்த 2013-ல்  நடைபெற்றஐபிஎல் போட்டியில் மஹேந்திர சிங் தோனி  கேப்டனாக கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 போட்டிகளில் ஆடி 11 வெற்றிகளைப்  பதிவு செய்துள்ளது.

கடந்த 2014-ல் நடந்த முதல் ஐபிஎல் போட்டியில் ஜார்ஜ் பெய்லி  கேப்டன் ஆக இருந்தபோது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 போட்டிகளில் ஆடி 11 வெற்றிகளைப்  பதிவு செய்துள்ளது.

 எனவே,  தற்போது வரை நான்கு அணி கேப்டன்களால் 11 முறை மட்டுமே  வெற்றி பெற முடிந்திருக்கிறது. ஆனால்,  தற்போது ஸ்ரேயாஸ்  தொடரில் நடக்கும் அனைத்துப் போட்டிகளிலும் வெல்வேன் என்று  தெரிவித்துள்ளார்.

Exit mobile version