சின்ன தல ரெய்னாவுக்கு டாட்டா காட்டிய சிஎஸ்கே !!

ஐபிஎல் 2020 தொடரில் இருந்து சுரேஷ் ரெய்னா வெளியேறியது அவரது தனிப்பட்ட முடிவு என தகவல்கள் வெளி வந்தாலும்ம, தோனிக்கும், அவருக்கும் இடையே ஏற்பட்ட   வாக்குவாதம் மற்றும் மோதல் போக்கு தான் காரணம்  என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால்சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அடுத்த  வருடம் ஆல்-ரவுண்டர் சுரேஷ் ரெய்னா (Suresh Raina) விளையாடுவது கூட சாத்தியமில்லை என்று தகவல் வெளியாகி  இருக்கிறது. 

ஏனெனில் 2021 பதிப்பிற்கு (IPL  Scheduled 2021) முன்னர் சி‌எஸ்‌கே அணியின் உரிமையாளர் என். சீனிவாசன் சுரேஷ் ரெய்னாவை விலக்கி விடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது துபாயில் இருக்கும் சிஎஸ்கே  குழுவில் 13 பேருக்கு கோவிட் -19 (COVID-19) தொற்று  உறுதியாகியுள்ளது. இதில் இரண்டு பேர் அணியின் முக்கிய  ஆட்டக்காரர்கள் – தீபக் சாஹர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் என தகவல்கள் தெரிவித்தன.  இதுபோன்ற தனிமைப்படுத்தப்பட்ட நேரத்தில்  சுரேஷ் ரெய்னாவின் இம்மாதிரியான நடத்தை  குழு நிர்வாகத்திற்கு மகிழ்ச்சியை தரவில்லை  என்பது தற்போது  வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இது சிஎஸ்கே உரிமையாளரான என். சீனிவாசனை  மிகுந்த கோபத்துக்கு  ஆளாக்கி உள்ளது. 

ஹோட்டலில் ஒரு அறையில் பால்கனி இல்லை என்பதை ஒரு பிரச்சினையாக எழுப்பியதால்  இந்த விவகாரம் வெடித்துள்ளது சிஎஸ்கே அணியை பொறுத்தவரை கேப்டன் மற்றும் மேலாளர்களுக்கு பால்கனி இருக்கும் ஹோட்டல் அறையை தருவது வழக்கம். 

தோனியின் அறையை பார்த்த சுரேஷ் ரெய்னா எனக்கும் இதுபோன்ற அரை வேண்டும் என்று கேட்டதால் தோனி மற்றும்  ரெய்னாவுக்கு இடையே விரிசல்  ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மொத்தம் 164 ஐபிஎல் ஆட்டங்களில் ஆடி 4527 ரன்கள்  எடுத்துள்ளசுரேஷ் ரெய்னா சிஎஸ்கே (CSK)  அணி சார்பாகஅதிக ரன் எடுத்தவர் என்ற  சாதனையை பெற்றவர் ஆவார். ஐபிஎல்  வரலாற்றிலேயே 5368 ரன்களுடன் இரண்டாம் இடத்தை தக்க வைத்துள்ளார்.  முதலிடத்தில் இந்திய கேப்டன் விராட் கோலியின் (Virat Kohli) 5412  ரன்கள் எடுத்துள்ளார்.

Exit mobile version