ஐபிஎல் ஸ்பான்சர் ட்ரீம்11(DREAM11) சீன நிறுவனமா?

 இந்த ஆண்டிற்கான ஐபிஎல்2020  தொடரின் ஸ்பான்ஷர்ஷிப்பை, பேன்டசி கேம்ஸ் நிறுவனமான டிரீம் 11 நிறுவனம் தற்போது தன்வசம் வைத்துள்ளது.

இந்திய – சீனா நாடுகளுக்கிடையே எல்லையில்  வலுவான மோதல்  ஏற்பட்டுள்ள நிலையில், சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய மத்திய அரசு  தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதனால் ஐபிஎல் தொடரின்  டைட்டில் மற்றும் முக்கிய ஸ்பான்ஷரான விவோ நிறுவனம்  தானாகவே விலகிக்கொண்டது.  இதனை  பிசிசிஐ ய்யும் உறுதிப்படுத்தியது. இந்த நிலையில், பிசிசிஐ, புதிய ஸ்பான்சரை நியமிக்க முடிவு செய்து,ஸ்பான்சர் ஐ தேடிக்கொண்டிருந்தது .பைஜூ,பதஞ்சலி போன்ற நிறுவனங்கள் பெயரும் அடிபட்டது ஆனால் தற்போது டிரீம் 11 நிறுவனத்தை ஸ்பான்சராக  பிசிசிஐ அறிவித்துள்ளது.

எத்தனை கோடிகள் மற்றும்  எவ்வளவு நாட்களுக்கு ஸ்பான்சர்ஷிப்?

தற்போது ஐபிஎல்2020  தொடரின் முக்கிய மற்றும் டைட்டில் ஸ்பான்சராக டிரீம் 11  இணைந்திருப்பதை, ஐபிஎல் நிர்வாக குழுவின் தலைவர் பிரிஜேஷ் படேல்  பத்திரிகைக்கு தெரியப்படுத்தியுள்ளார். டிரீம் 11 நிறுவனம்,  ரூ.222 கோடி கொடுத்து ஸ்பான்சர்ஷிப் உரிமையை  தன் வசம் வைத்துள்ளது. 

 மற்றும் 2020, டிசம்பர் 31 வரை, இந்த ஸ்பான்சர்ஷிப் உரிமைக்கான காலம்  டிரீம் 11 நிறுவனத்திடம்  மட்டுமே இருக்கும்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10ம் தேதி வரை ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. தவிர்க்கமுடியாத  காரணங்களினால், தொடர்  நடக்காமல் போனாலும்  அல்லது  தள்ளி வைக்கும் நிகழ்வு நடந்தாலும்  நடக்கலாம் என்பதை  முன்கூட்டியே  ஆராய்ந்து, இந்தாண்டு இறுதிவரைக்கும் இந்த ஸ்பான்சர்ஷிப் உரிமம்  ட்ரீம் லெவன் நீட்டிக்கப்பட்டுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

எத்தனை நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றனர்?

ஐபிஎல் தொடரின் ஸ்பான்சர்ஷிப் உரிமையை விவோ நிறுவனம் ரத்து செய்து கொண்டதையடுத்து, பிசிசிஐ, புதிய ஸ்பான்சர்களை  தேடும் முயற்சியில் ஈடுபட்டனர், ஸ்பான்சர் ஆக விரும்பும் நிறுவனங்களுக்கு  அழைப்பு விடுத்திருந்தனர் இதில். டிரீம் 11, பைஜூ, உன்அகாடமி  ஆகிய நிறுவனங்கள்  விருப்பம்  தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஐபிஎல் 2020  ஸ்பான்சர்ஷிப் வருமானம்  பிசிசிஐக்கு லாபமா நஷ்டமா ?

 கடந்த 2018ம் ஆண்டில், ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப் உரிமையை, விவோ நிறுவனம்   சரியாக 5 ஆண்டுகள் கால அளவிற்கு ரூ.2,199 கோடி கொடுத்து  உரிமையை தன்வசம்  பெற்றிருந்தது.  இதற்காக விவோ நிறுவனம்,  ஒரு வருடத்திற்கு பிசிசிஐக்கு ரூ.439.80 கோடி  தொகையும் கட்டி வந்துள்ளது. ஆனால், தற்போது இந்தாண்டிற்கான ஐபிஎல் ஸ்பான்சர் உரிமையை டிரீம் 11 நிறுவனம், வெறும்ரூ.222 கோடிக்கு  மட்டுமேவாங்கியுள்ளது. இதன்மூலம், பிசிசிஐ அமைப்பிற்கு இந்தாண்டு ரூ.217.80 கோடிகள் குறைவாக  கிடைத்துள்ளதால்    பிசிசிஐ பொருத்தவரை  இந்த வருடத்திற்கு ஐபிஎல்2020கு இது நிதிப்பற்றாக்குறை  தான்.

இதைப்பற்றி பிசிசிஐ  வெளியிட்டுள்ள கருத்து:

பிரிஜேஷ் படேல்

நாங்கள் இதை ஒரு பாசிட்டிவ் அப்ரோச்  ஆகவே கருதுகிறோம் என பிசிசிஐ கூறியுள்ளது  இதுபோன்ற  கொரோனா வைரஸ் தொற்று காலத்திலும் நமது ஐபிஎல்2020 உரிமம்  200 கோடியை தாண்டியுள்ளது மகிழ்ச்சியான விஷயமே அதுமட்டுமின்றி இது டிசம்பர் 31 வரை மட்டுமே என்பது கூடுதல் மகிழ்ச்சி என்று  படேல் தெரிவித்துள்ளார்.

டிரீம் 11 நிறுவனத்திற்கும் சீனாவிற்கும் உள்ள தொடர்பு என்ன?

ஆம்  அதுவும் ஒருவகையில் உண்மைதான்  சீனாவின் முன்னணி இணையதள சேவை நிறுவனமும் நிதிச் சேவை நிறுவனமான டென்சன்ட் ஹோல்டிங்ஸ்  நிறுவனத்தின் அதிக பங்குகளை  ட்ரீம் லெவன் நிறுவனம் தன்வசம் கொண்டுள்ளது கடந்த வருடத்தில் இந்தியாவில் மட்டும் இந்த நிறுவனம் சுமார் 1  பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்துள்ளது  அதன் மூலம் ஒரு புதிய “கேம் ஸ்டார்ட் அப்கம்பெனியையும் துவங்கியுள்ளது  எனவேதான்  டிரீம் 11 நிறுவனத்தை இந்திய நிறுவனமாக  ஏற்று  ஐபிஎல் 20 20 ஸ்பான்சர்ஷிப்  உரிமையை பிசிசிஐ  அவர்களிடத்தில்  வழங்கியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version