‘செஸ் சாம்பியன் பட்டம்’ இந்தியாவிற்கே அதிக வாய்ப்பு – மாக்னஸ் கார்ல்சன்

செஸ் சாம்பியன் பட்டம் வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக உலக செஸ் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் தெரிவித்துள்ளார்.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் இன்று தொடங்கி ஆகஸ்டு 10ம் தேதி முதல் நடைபெறுகிறது. 188 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். சமீபத்தில் நடந்த செஸ் சாம்பியன் போட்டியில், தமிழ்நாட்டை சேர்ந்த உலக ஜூனியர் செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா, 4முறை உலக செஸ் சாம்பியனான மாக்னஸ் கார்ல்சனை தோற்கடித்தார்.

இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தயாராகி வரும் மாக்னஸ் கார்ல்சன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் அளித்த பேட்டியில், “என்னை பிரக்ஞானந்தா இரண்டு முறை வீழ்த்தியுள்ளார். இருப்பினும் அவருக்கு எதிராக பிளஸ்கோரை உயர்த்தியுள்ளேன். அவர் ஒரு திறமையான இளம் வீரர். உண்மையை கூற வேண்டுமானால் பிரக்ஞானந்தா தலைமையிலான இந்திய பி அணியே மிகவும் ஆபத்தானது. அவர்கள் மிகவும் வலுவாக இருக்கிறார்கள் என எண்னுகிறேன். இந்திய ஏ மற்றும் இந்திய பி அணிகள் சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது” என்றார்.

-பா.ஈ.பரசுராமன்.

Exit mobile version