இந்திய அணிக்கு எதிராக டி20ல் விளையாடவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் விவரம் வெளியாகியுள்ளது.
இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸூக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒரு நாள் போட்டியை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. டி20 போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக ஹெட்மையர் இடம்பெற்றுள்ளார். எவின் லூயிஸ் இடம்பெறவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியில் விளையாடும் வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்: நிலோலஸ் பூரன் (கேப்டன்),ரோவ்மன் பவல், கைல் மேயர்ஸ், புரூக்ஸ், ஹெட்மையர், டெவன் தாமஸ், ஓடியன் ஸ்மித், ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட், கீமோ பால், மொமினிக் டிரேக்ஸ், அல்ஸாரி ஜோசப், ஒபட் மெகாய்,அகேல் ஹூசைன், ஹேடன் வால்ஸ் ஜூனியர். போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
