அதிரடி பேட்டிங்கை அனுபவித்து செய்கிறேன் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று முன் தினம் நடந்தது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா 6 விக்கெட்களை இழந்து 190 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 64 ரன்களும், தினேஷ் கார்த்திக் 41 ரன்களும் எடுத்தனர். இந்த போட்டியில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் (37) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின் இதுகுறித்து பேசிய அவர், “பின்வரிசையில் இறங்கி நான் மிகவும் உற்சாகமாக அனுபவித்து பேட்டிங் செய்கிறேன்.குறிப்பிட்ட நாளில் அணியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விளையாட முடியும். இவ்வாறு ஆடும்போது கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் ஆதரவு இருப்பது அவசியம்.எனக்கு அவர்களின் ஆதரவு அமோகமாக இருக்கிறது” என்று கூறினார்
