3வது இடத்திற்கு முன்னேறினார் ஸ்மிருதி மந்தன்னா

பெண்களுக்கான 20 ஓவர் போட்டியில் ஸ்மிருதி மந்தனா 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

பெண்கள் 20 ஓவர் பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஒரு இடம் முன்னேறி 705 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்தார். காமன்வெல்த் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் 63 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்த சாதனை பட்டியலில் இடம்பிடித்தார். ஆஸ்திரேலியாவின் மெக் லானிங் 733 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பெத் மூனி 707புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர்.

Exit mobile version