T20 women: ஸ்மிருதியின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்திற்கு சென்றுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலாவது டி20 போட்டியில்  இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டி20 போட்டி லண்டனில் உள்ள டெர்பியில் நடைபெற்றது.  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷபாலி 20 ரன்னிலும், ஹேமலதா 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய நட்சத்திர பேட்டிங் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 13 பவுண்டரிகள் உள்பட 79 ரன்களை குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். இறுதியில் இந்திய அணி 16.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 146 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலை வகிக்கின்றன.

Exit mobile version