கண்ணா.. நா திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. இந்திய அணிக்கு திரும்புகிறார் ரோகித் சர்மா

பிசிசிஐ நடத்திய உடற்தகுதி தேர்வில் நட்சத்திர விரர் ரோஹித் சர்மா, தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் முக்கிய வீரராக உள்ள ரோகித் சர்மா, தொடக்க வீரராக சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து அசத்தி வருகிறார்.
ஊரடங்கிற்கு பிறகு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற போது, காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரோகித் சர்மா சில போட்டிகளில் விளையாடாமல் இருந்துவி பிறகு மீண்டும் களமிறங்கினாா். டெல்லி அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில், சிறப்பாக விளையாடி 5வது முறையாக மும்பை அணிக்காக கோப்பையையும் கைப்பற்றினார்.

ஆனால், முழுமையாக குணமடையாத நிலையிலேயே ரோகித் சர்மா, ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக மீளாத காரணத்தால் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இந்திய அணியில் ரோஹித் சா்மா சோக்கப்படவில்லை.

தீவிர சிகிச்சைக்குப் பிறகு காயத்தில் இருந்து மீண்டுள்ள ரோஹித் சா்மாவின் உடல் தகுதி எவ்வாறு உள்ளது என்பது தொடா்பாக பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் இன்று பரிசோதனை நடைபெற்றது. இதில் அவர் தேர்ச்சி அடைந்துள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு விரைவில் செல்லவுள்ளார். ஆஸ்திரேலியாவின் தனிமைப்படுத்துதல் விதிமுறைகள் காரணமாக ரோஹித் சர்மாவால் நான்கு டெஸ்டுகளிலும் விளையாட முடியாது. கடைசி இரு டெஸ்டுகளில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, எதிர்காலத்தில் உடற்தகுதியை காரணம் காட்டி அணியில் இருந்து ஒதுக்கபடுவதை தவிர்க்க, தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு ரோகித் சர்மா உடல் எடையை குறைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version