தோனிக்கு முக்கிய பொறுப்பு … டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி!

அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 4ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி குறித்த முழு விவரங்களை பிசிசிஐ நேற்று வெளியிட்டது.

இதில், விராட் கோலி தலைமையிலான அணியில், இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ராகுல் சாஹர், அஸ்வின் இடம் பெற்றுள்ளனர்.

தொடர்ந்து டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இந்திய அணியின் ஆலோசகராக எம்.எஸ்.தோனி இருப்பார் என பிசிசிஐ துணை தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

மேலும், ஐபிஎல்லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யாகுமார், இஷான் கிஷனுக்கும் அணியில் இடம்பெற்றுள்ளார்.

புவனேஷ்வர் குமார், பும்ரா, முகமது ஷமி அனுபவ வேகப்பந்து வீச்சாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆல் ரவுண்டர்களான ரவீந்தர ஜடேஹா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராகச் செயல்பட எம்.எஸ்.தோனினி சம்மதித்துள்ளது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, “பிசிசிஐ-யின் கோரிக்கையை ஏற்று இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட எம்.எஸ். தோனி சம்மதித்துள்ளார். இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. டி20 உலகக் கோப்பை தொடரில் தோனி இந்திய அணியுடன் இணைந்து செயல்படுவார். இந்திய அணிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ரவி சாஸ்திரி மற்றும் பிற பயிற்சி ஊழியர்களுடன் இணைந்து எம்.எஸ்.தோனி செயல்படுவார்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version