மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவாரா சூர்யகுமார் யாதவ்?

“கடுமையாக உழைத்து வருகிறேன்; எல்லாம் சரியாக அமையும் என நம்புகிறேன்”

இந்திய டி20 அணியில் தனது இடத்தை இழந்துள்ள முன்னாள் கேப்டன் சூர்யகுமார் யாதவ், மீண்டும் தேசிய அணிக்கு திரும்புவதற்காக கடுமையாக உழைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற Pro Govinda League நிகழ்ச்சியில் பங்கேற்ற சூர்யகுமார் யாதவிடம் இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து கடுமையாக உழைத்து வருவதாகவும், விஷயங்கள் சாதகமாக அமைந்தால் அனைத்தும் சரியான இடத்திற்கு வரும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார். இந்த ஆண்டின் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியை சாம்பியன் பட்டத்திற்கு வழிநடத்திய சூர்யகுமார் யாதவ், பின்னர் தனது கேப்டன் பதவியையும் அணியில் இருந்த இடத்தையும் இழந்தார். சமீப காலங்களில் அவரது பேட்டிங் ஃபார்ம் எதிர்பார்த்த அளவில் இல்லாத நிலையில், தேர்வுக்குழுவும் அடுத்த கட்டத்தை கருத்தில் கொண்டு அணியில் மாற்றங்களை மேற்கொண்டது. இந்நிலையில், மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவதற்கான தனது முயற்சிகளை சூர்யகுமார் தொடர்வதாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version