சுமார் 1,500 பேரின் நிலை தெரியவில்லை; புதிய வெள்ள அபாயம் குறித்து அதிகாரிகள் எச்சரிக்கை
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளை புரட்டிப்போட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 392 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 1,500 பேரின் நிலை இன்னும் தெரியவில்லை.
நேபாளத்தில் 389 பேரும் திபெத்தில் 3 பேரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பெருவெள்ளத்தால் பல்வேறு பகுதிகளில் சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, வெள்ளத்தால் உருவாகியுள்ள புதிய தடுப்பு ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளுடன், புதிய வெள்ள அபாயத்தைக் கண்காணிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
