ஐபிஎல்-2020; இன்றைய போட்டியில் பெங்களூரைப் பழிதீர்க்குமா மும்பை இந்தியன்ஸ்…

இன்றைய ஐபிஎல்-2020 தொடரில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர் ஆப் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன

நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சற்றுத் தாமதமாகத் தொடங்கினாலும் ரசிகர்களின் பொழுதுபோக்கிற்கு நல்ல தீனியைக் கொடுத்துள்ளது.

இந்நிலையில், இன்றைய ஐபிஎல்-2020 தொடரில் மும்பை இந்தியன் – ராயல் சேலஞ்சர் ஆப் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.

ஐக்கிய அமீரகத்தில் உள்ள அபுதாபியில் இந்திய நேரப்படி இன்று இரவு 7:30 மணிக்கு இப்போட்டி தொடங்கவுள்ளது.

இதில், மும்பை அணி 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் கோலி தலைமையிலான பெங்களூர் அணி உள்ளது.

எனவே இன்று நடைபெறவுள்ள போட்டியில் இவ்விரு அணிகளும் வெற்றி பெற்று ஃப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதிபெற முனைப்பு காட்டிவருகின்றனர்.

ஏற்கனவே காயத்தால் அவதிப்பட்டு வரும் மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா இப்போட்டியில் கலந்துகொள்ளமாட்டார் என தெரிகிறது.

இத்தொடரில் இதற்கு முன்னமே இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

எனவே மும்பை அதற்கு இன்று பழிதீர்க்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

Exit mobile version