ஐபிஎல்-2020; ஆறுதல் வெற்றி பெறுமா சென்னை கிங்ஸ்???? இன்று கொல்கத்தாவுடன் மோதல்!

சென்னை கிங்ஸ் அணி இன்று கொல்கத்தா அணியுடன் மோதவுள்ளது. இதில் ஆறுதல் வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

நடப்பு ஐபிஎல் தொடர் உற்சாகமாக நடைபெற்றாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஃப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் இன்று 49 வது ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை கிங்ஸ் அணி கொல்கத்தா அணியுடன் மோதவுள்ளது.

ஏற்கனவே 3 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் பெற்றுள்ள சென்னை அணிக்கு இந்த முறை பிராவோ, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாதது பலவீனமாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தொடர் தோல்விகளைப் பெற்று விமர்சனங்களைச் சந்தித்து வந்த சென்னை கிங்ஸ் கடந்தபோட்டியில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் 4 வது இடத்துக்கு கொல்கத்தா இன்று சென்னையை வென்றாக வெண்டிய கட்டாயத்தில் உள்ளது.

எனவே தொடரிலிர்ந்து வெளியேறினாலும் சென்னை அணி இன்று துபாயின் இரவு 7;30 மணிக்கு நடைபெறும் போட்டியில் கொல்கத்தா அணிக்கு டஃப் கொடுக்குமா என்பதைப் பார்க்கலாம்.

Exit mobile version