ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், பெங்களுர் அணி 120 ரன்களை சேர்த்தது.
ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 7 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள பெங்களுர் அணி, இன்றைய போட்டியில் வென்று பிளேஆப் சுற்றுக்குள் நுழையும் நோக்கில் களமிறங்கியது. 5 போட்டிகளில் வென்றுள்ள ஐதராபாத் அணி அடுத்த 2 போட்டிகளிலும் வென்றால், பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கலாம் என்ற நிலையில் களமிறங்கியது.
இந்த சூழலில் களமிறங்கிய பெங்களூர் அணியின் தொடக்க வீரர் தேவ்தத் 5 ரன்களிலும், கேப்டன் கோலி 7 ரன்களிலும், சந்தீப் சர்மா பந்து வீச்சில் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.
இதையடுத்து வந்த டிவிலியர்ஸ் 24 ரன்களை சேர்த்து, சபாஷ் நதீம் பந்துவீச்சில் நடையை கட்டினார். ஓரளவுக்கு தாக்குப் பிடித்த பிலிப்பே 32 ரன்களை சேர்த்து ரஷீத் கான் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் அந்த அணி 76 ரன்களை சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இந்த சரிவில் இருந்து பெங்களூர் அணியால் இறுதிவரை மீள முடியவில்லை. இதையடுத்து 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 120 ரன்களை மட்டுமே டுத்தது. ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக சந்தீப் சர்மா மற்றும் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.