இந்த ஆறு நாள் பாடத்தை எங்களால் மறக்கவே முடியாது ஐபிஎல் வீரர் புலம்பல்!!

ஜபிஎல் 2020 போட்டிகள் கொரொனாவால்தள்ளி வைக்கப்பட்டன. ஐக்கிய அமீரகத்தில்  இந்த மாதம் 19-ம் தேதியிலிருந்து போட்டிகள் ஆரம்பமாகிறது. போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு  பல கடுமையான கட்டுப்பாடுகள்   விதிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே முன்னர்சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மஹேந்திர சிங் தோனி உள்ளிட்ட வீரர்கள்  ஐந்து நாட்கள்   சென்னையில் நடந்த பயிற்சி  முகாமில் கலந்து கொண்டனர். அதற்கு  முன்னரே கொரோனா பரிசோதனையும்  மேற்கொண்டனர்.

 அதன்பிறகே  ஐக்கிய அமீரகம்  புறப்பட்டு சென்றனர். அங்கு வீரர்கள்  இன்னொருவரை  சந்திப்பது முதல் பயிற்சி எடுப்பது வரை  பல்வேறுவிதமான கட்டுபாட்டுகள்  ஏற்படுத்தப் பட்டிருந்தன. காரணம் கொரோனா நோய்த் தொற்று  எந்த வீரர்களுக்கும் இடையே வந்து விடக்கூடாது என்பதாலே தான்  என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 இதில் ஒவ்வோர் அணி வீரர்களும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள  வருத்தப்பட்டார்கள்.  இப்படி, ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட  ஒரு ஐபிஎல் வீரர்  தனக்கு ஏற்பட்ட சிரமமான அனுபவத்தை புலம்பி தள்ளியிருக்கிறார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் டீமின்  முக்கிய நட்சத்திர பந்துவீச்சாளர் முகம்மது ஷமி ஆவார். அவர்  பத்திரிகைக்கு கொடுத்திருக்கும் பேட்டி ஒன்றில், ‘நான்கு மாதங்கள்  வீட்டிலேயே இருப்பதுஎன்பது விளையாட்டு வீரர்களுக்கு   மட்டுமின்றி  அனைத்து  மனிதர்களுக்கும் கடினமானதுதான். நல்ல வேளையாக  எனக்கு வீட்டிலேயே பயிற்சிகள்  செய்கின்றவர் செய்தி அமைந்திருந்தது. அதற்கு கடவுளுக்கு நன்றி  தெரிவித்துக் கொள்கிறேன். 

தற்போது ஐக்கிய அமீரகத்தில்   ஆறு   தினங்கள்  தனிமைப்பட்டு இருந்தபோது  மிகவும் கடினமாக உணர்ந்தேன்.  ஏனெனில்,  சென்ற நான்கு மாதங்களில் பயிற்சி எடுத்ததோடு, உதவி  கேட்பவர்களுக்கு  சில  உதவிகளும்  செய்து வந்துள்ளேன்.  இது போல் என்னை நான்  ஒருவகையில் பிஸியாக வைத்துக்கொண்டேன். ஆனால்,  தற்போது இந்த ஆறு நாட்கள் தனிமைபப்டுத்தல் மூலம் சென்ற நான்கு மாதங்கள்  உணர்த்தாத ஒன்றை  எனக்கு இது உணர்த்தி விட்டது  தனிமைப் படுத்தப் பட்டவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதை  முழுமையாக உணர்ந்து இருக்கிறேன்’ என்று  தெரிவித்துள்ளார் ஷமி.

Exit mobile version