தொடங்குகிறது ஐபில் போட்டி திருவிழா …சென்னையில் இன்று …மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதல்

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின், முதல் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.

14வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் போட்டியானது இன்று சென்னையில் நடைபெற உள்ளது. சென்னையில் நடைபெறும் இந்த முதல் போட்டியில் ,மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்த ஐபிஎல் போட்டி தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாது ,வெளிநாட்டு வீரர்களும் பங்கு பெறுவார்கள். இந்த ஐபிஎல் போட்டிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. ஐபிஎல் போட்டியானது இங்கு திருவிழா போல நடைபெறும். ஆனால் கடந்த ஆண்டு 13வது ஐபிஎல் போட்டி தொடரானது , கொரோனா பாதிப்பால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

தற்போது 2021 ஐபிஎல் சீசன் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு ,அதிகரித்து காணப்படுவதால் ,போட்டி நடத்துவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டி நடைபெறும் மைதானங்களில் ,போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் 8 அணிகளில் பங்குபெற்றுள்ள, அனைத்து வீரர்கள் மற்றும் ஊழியர்கள் ,கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கின்றனர். இதன் காரணமாக அடிக்கடி வீரர்களுக்கு ,கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பரிசோதனையில் வீரர்கள், யாருக்காவது தொற்று பாதிப்பு ஏற்பட்டால், அவர்கள் 10 நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், இன்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகளுக்கிடையே போட்டி நடைபெறுகிறது. கடந்த 8 சீசன்களாக மும்பை அணி ,தொடக்க ஆட்டத்தில் தோல்வியை சந்தித்து வருகிறது. எனவே இன்று நடைபெறும் முதல் போட்டியில் ,மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதுபோலவே ஆர்சிபி அணியில் தற்போது புதிய வீரர்கள் இணைந்துள்ளனர். இதனால் கடந்த ஒரு சீசனில் கூட பட்டத்தை வெல்லாத ஆர்சிபி அணி ,இந்த சீசனில் வெல்லுமா என்று ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Exit mobile version