நாளை வெளியாகும் ஐபிஎல் 2020 அட்டவணை முதல் போட்டி யாருக்கு?

ஐபிஎல் 2020 போட்டிகள் வரும் 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமிரகம் நாடுகளான அபுதாபி, துபாய், மற்றும் ஷார்ஜாவில் நடைபெறுகின்றன.

இதனை அடுத்து 8 அணிகளை சேர்ந்த வீரர்களும் துபாய்க்கு பயணம் மேற்கொண்டு அங்கு  அவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு பின்பு தற்போது பயிற்சி ஆட்டங்கள் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.

இதில் சிஎஸ்கே அணி முகாமில் ஒருசில வீரர்களுக்கும்,வேலை ஆட்களுக்கும்  தொற்று பாதிப்பு   உறுதியானது  பின்பு அது குணம் ஆகி விட்டதாக தகவல்கள் வெளிவந்தன. எனவே ,சிஎஸ்கே அணி மட்டும் நாளை முதல் பயிற்சிகளை  தொடங்கும் என  தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐபிஎல்2020  போட்டிகள் இந்த மாதம் 19ம் தேதி தொடங்கி நவம்பர் 10ம் தேதி நிறைவடையும் என ஏற்கனவே  தகவல் வெளியானது.

இதற்கிடையே தற்போது செய்தியாளர்களிடம் பேசிய  பிசிசிஐயின் தலைவர் சவுரவ் கங்குலி,  நாளை ஐபிஎல் 2020ன் அட்டவணை வெளியிடப்படும் என்று  தெரிவித்துள்ளார்.இந்த அட்டவணையின் மூலம்  போட்டிகள் எந்த இடத்தில் நடக்கும்,  எந்த  அணிகளுக்கிடையே முதல் போட்டி  இருக்கும்  மற்றும் பிற்பகலில் நடக்கும்  போட்டிகள் எவை எவை என, தற்போது இருக்கும்  வெவ்வேறு குழப்பங்களுக்கு விடை கிடைக்கும்  என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Exit mobile version