சன்ரைஸர்ஸ் ஹதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் இன்று மோதல் !
சன்ரைஸர்ஸ் ஹதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் இன்று மோதல் !
ஐபிஎல் – 2020 நடப்பு தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வருகிறது.
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட அணிகள் சோடை போவதும், எதிர்ப்பார்க்கப்படாத அணிகள் எழுச்சி கண்டு வெற்றி பெருவதுமாக ஐபிஎல் போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று இரவு 7;30 மணிக்கு துபாயில் நடைபெறும் போட்டியில் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகின்றன.
ஹைதராபாத் 5 போட்டிகளில் விளையாடி 2போட்டிகளில் வென்றுள்ளது. பஞ்சாப் அணி 5 போட்டிகளில் விளையாடி 1 ல் வெற்றிபெற்றுள்ளது.
இவ்விரு அணிகளும் 14 முறை நேருக்கு நேர் மோதியிருக்கின்றன. இதில் ஐதராபாத் 10 போட்டிகளிலும், பஞ்சாப் அணி 4 போட்டிகளும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.