ஐபில்-2020; இன்றைய போட்டிகள்: பஞ்சாப்- கொல்கத்தா ;சென்னை – பெங்களூர் அணிகள் மோதல் !

இன்றைய போட்டியில் சென்னை vs பெங்களூர்; பஞ்சாப் vs கொல்கத்தா அணிகள் மோதல்.

ஐபிஎல் போட்டிகள் இந்த வருடம் கொரோனா தாக்கம் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு நாளும் ரசிகர்களுக்கு பரப்பரப்பை ஏற்படுத்துவதுபோல் சுவாரஸ்யமாக போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இன்றைய ஆட்டத்தில் அபுதாபியில் மலை 3:30 மணிக்கு கே.எஸ்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியுடன், தினேஷ் கார்த்திக் தலைமையிலான  கொல்கத்தா அணி மோதவுள்ளது.

இந்த இருஅணிகளும் இதுவரை 25 முறை நேரில் மோதியுள்ளன. கொல்கத்தா அணி 17 முறையும் பஞ்சாப் அணி 8 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

துபாயில் இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறும்  மற்றொரு ஆட்டத்தில் சென்னை அணி பெங்களூர் அணியுடன் மோதவுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை மோதியுள்ளன. இதில் 15 போட்டிகளில் சென்னை அணியும்,  பெங்களூர் அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு காணப்படவில்லை .

இன்றைய ஆட்டத்தில் பரபரப்பு கூடும் என்று தெரிகிறது.

Exit mobile version