இது ரொம்பச் சின்ன விஷயம் ஐபிஎல்லில் விவோ நீக்கம் பற்றி கங்குலி !!

சீன மொபைல் போன் நிறுவனமான விவோவுடனான ஐபிஎல் டைட்டில்ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தியதைபிசிசிஐதலைவர் சவுரவ் கங்குலி விவரித்தார்,

இது ஒரு “நிதி நெருக்கடிக்கு” வழிவகுக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அவர் தெரிவித்தார்.

சீன-இந்தியா எல்லை நிலைப்பாட்டை அடுத்து சீன தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்ற கூக்குரலின் மத்தியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி 2020 ஐபிஎல் போட்டிக்கான  விவோ வின் பங்களிப்பை நிறுத்தி வைக்க பிசிசிஐ மற்றும் விவோ வியாழக்கிழமை முடிவு செய்து அறிவித்துள்ளன .டைட்டில் ஸ்பான்சர்ஷிப் ஐபிஎல்லின் வணிக வருவாயில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியாகும், அதில் மீதிப்பாதி எட்டு உரிமையாளர்களால் சமமாக பகிரப்படுகிறது. 

விவோ 2018 முதல் 2022 வரை ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமையை 2190 கோடி ரூபாய்க்கு வென்றது, இது ஆண்டுக்கு சுமார் 440 கோடி ரூபாய் ஆகும் 

இதைப்பற்றி கல்வி புத்தக வெளியீட்டாளர்கள் எஸ் சந்த் குழுமத்தால் சனிக்கிழமையன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு வெபினாரில் கங்குலி கூறுகையில், “நான் இதை ஒரு நிதி நெருக்கடி என்று அழைக்க மாட்டேன்.

“பி.சி.சி.ஐ, எப்பொழுதும் மிகவும் வலுவான அடித்தளம் அமைத்துள்ளது –  நமதுவிளையாட்டு, வீரர்கள், நிர்வாகிகள்  அனைவரும் சேர்ந்து கடந்த காலங்களில் இந்த விளையாட்டை  மிகுந்த வலிமையாக்கியுள்ளனர், பி.சி.சி.ஐ  இந்த ஸ்பான்சர்ஷிப் விஷயத்தையும் ஈஸியாக கையாளும் திறன் கொண்டது.”

இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பி.சி.சி.ஐ எப்போதும் “பிளான் பி” வைத்திருப்பதாக கங்குலி கூறினார். 

2021 ஆண்கள் டி 20 உலகக் கோப்பைக்கான  இடம் இந்தியாவை தேர்ந்தெடுத்துள்ள ஐ.சி.சி முடிவு குறித்தும் அவர் பேசினார்.

“2021 மற்றும் 2023 உலகக் கோப்பைகளை நடத்துவதற்காக இந்தியாவை ஐசிசி நியமித்துள்ளது  எனவே அதில் பெரிய மாற்றம் எதற்கும் வாய்ப்பில்லை.

ஆம்,  தற்போதைய கோவிட் நிலைமை அனைவரையும் கவலையடையச் செய்தது, விரைவில் இதை நாம் கடந்து செல்வோம் என்று நம்புவோம் என்று தெரிவித்தார் 

Exit mobile version