சஞ்சு சாம்சன் அதிரடி தொடருமா? ராஜஸ்தான் அணிக்கு 175 ரன்கள் இலக்கு

ராஜஸ்தான் அணிக்கு 175 ரன்கள் இலக்காக கொடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஐ.பி.எல் தொடரில் 12 வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து கொல்கத்தா அணி சார்பாக சுப்மன் கில்,நரைன் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.ஆரம்பமே கில் ராஜ்புட் வீசிய 2 வது ஓவரில் சிக்ஸர் அடித்து சிறப்பான தொடக்கம் தந்தார்.மறுமுனையில் ரன் எடுக்க முடியாமல் தடுமாறி கொண்டு இருந்த நரைன் தூக்கி அடிக்க, அந்த எளிய கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார் ராபின் உத்தப்பா. உனத்கட் வீசிய 5 வது ஓவரில் நரைன்(15 ரன்கள்,பந்துகள்)ஒரு சிக்ஸர்,ஒரு பௌண்டரி அடித்து அடுத்த பந்தே கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.அடுத்த வந்த ராணா வந்தவுடன் பௌண்டரி அடித்து அசத்த,6 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்து இருந்தது

.ரியான் பராக் வீசிய 8 வது ஓவர் முதல் பந்தே ராணா அட்டகாசமாய் ஒரு சிக்ஸர் பறக்க விட,கொல்கத்தா அணியின் ஸ்கோர் மித வேகத்தில் நகர்ந்தது.ஸ்ரேயாஸ் கோபால் வீசிய 9 வது ஓவரில் கில் தன் பங்கிற்கு 2 பௌண்டரிகளை ஓட விட்டார்.தொடர்ந்து இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நேரத்தில்,திவாதியா பந்தில் ராணா(22 ரன்கள்,17பந்துகள்) தூக்கி அடித்து பராக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.10 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்பிற்க்கு 82 ரன்கள் எடுத்து இருந்தது.அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கில்(47 ரன்கள்,4 பந்துகள்) ஆர்ச்சர் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.கோபால் வீசிய 13 வது ஓவரில் ரசல் 2 சிக்ஸர் அடித்து நொறுக்க,கொல்கத்தா அணி 100 ரன்களை கடந்தது.ஆர்ச்சர் வீசிய 13.1 வது ஓவரில் கேப்டன் தினேஷ் கார்த்திக் 1 ரன்களுடன் வெளியேற,ராஜ்புட் வீசிய அடுத்த ஓவரில் ரசல்(24 ரன்கள்,14 பந்துகள்) ஒரு சிக்ஸர் அடித்து அடுத்த பந்தே கேட்ச் ஆகி வெளியேறினார்.

15 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்து இருந்தது.தொடர்ந்து ராஜஸ்தான் அணி சிறப்பான பந்து வீச,மோர்கன் மற்றும் கம்மின்ஸ் ரன்களை எடுக்க போராடி அவ்வப்போது பௌண்டரி அடித்து கொண்டு இருந்தனர்.கம்மின்ஸ்(10 பந்துகள்,12 ரன்கள்) டாம் கர்ர்ன் பந்தில் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேற,18 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 149 ரன்கள் எடுத்து இருக்க,அடுத்து வந்த நாகர்கோட்டி பௌண்டரி அடித்து ஓரளவு மோர்கனுக்கு கை கொடுத்தார். கடைசி ஓவரில் மோர்கன் டாம் கர்ர்ன் பந்தில் ஒரு சிக்ஸர் அடிக்க,20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி174 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணிக்கு 175 ரன்கள் இலக்காக கொடுத்தது.

Exit mobile version