கொல்கத்தா அணியின் சிறப்பான பந்து வீச்சால் ஹைதராபாத் அணி 142 ரன்கள் மட்டுமே எடுத்தது .
அபுதாபி:
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்றது.
இந்த போட்டியின் 8-வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு அபுதாபில் தொடங்கியது. தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதியது.
இரு அணிகளும் யார் முதல் வெற்றியை பெறப்போகிறது என்று ஆவலுடன் களம் இறங்கியது.ஹைதரபாத் அணி சார்பாக தொடக்க வீரர்களாக கேப்டன் வார்னர்,பேரிஸ்டோவ் ரன் எண்ணிக்கையை தொடங்கினர்.ஆரம்பம் முதல் வார்னர் அதிரடியை வெளிப்படுத்த,மறுமுனையில் பேரிஸ்டோவ் கம்மின்ஸ் வீசிய 4 வது ஓவரில் கிளீன் போல்ட் ஆகி 10 பந்துகள் பிடித்து 5 ரன்களுடன் வெளியேறினார்.அடுத்து களம் இறங்கிய மனீஷ் பாண்டே வந்தவுடன் 6 அடித்து தனது ரன் எண்ணிக்கையை தொடங்க, 8.2 ஓவர்களில் மனீஷ் பாண்டே 2 வது சிக்ஸர் அடித்து ஹைதராபாத் அணியின் ஸ்கோர் 50 ரன்களை கடக்க உதவி செய்தார்.அடுத்து வருண் சக்கரவர்த்தி வீசிய 9.1 வது ஓவரில் ஹைதராபாத் கேப்டன் அவரிடமே கேட்ச் கொடுத்து 36 ரன்களுடன் வெளியேற,10 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 2 விக்கெட்களை இழந்து 61 ரன்கள் எடுத்து இருந்தது.
அடுத்து வந்த சஹாவும்,மனீஷ் பாண்டேவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த ஸ்கோர் மித வேகத்தில் நகர்ந்தது.இருவரும் பௌண்டரி என்ற ஒன்றை மறந்து ஓடி ஓடி ரன்களை மட்டுமே எடுக்க,15.1 ஓவரில் ஹைதராபாத் அணி 100 ரன்களை தொட்டது.மிக நீண்ட நேரத்திற்கு பிறகு 16.3 வது ஓவரில் மனீஷ் பாண்டே 36 பந்துகளில் 50 ரன்களை கடந்தார்.17 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 2 விக்கெட் இழந்து 118 ரன்கள் எடுத்து இருந்தது. ரசல் வீசிய 17.4 ஓவரில் 51 ரன்களுடன் மனீஷ் பாண்டே வெளியேற,அதே ஓவரில் சஹா ஒரு சிக்ஸர் அடித்து அசத்தினார்.அடுத்து களமிறங்கிய நபியும் தன் பங்கிற்கு மாவி பந்தில் ஒரு பௌண்டரி அடித்தார்.ரசல் வீசிய 20 வது ஓவரில் நபி மீண்டும் ஒரு பௌண்டரி அடிக்க,அடுத்த பந்தே சஹா ரன் அவுட் ஆகி வெளியே சென்றார்.ஹைதராபாத் அணி 20 வது ஓவர் முடிவில் 142 ரன்கள் அடித்து கொல்கத்தா அணிக்கு 143 ரன்களை இலக்காக கொடுத்தது.