அடடே ! கொல்கத்தா சூப்பர் ஓவர்ல கலக்கிட்டாங்க… ஹைதரபாத் ஆரம்பத்திலேயே 2 விக்கெட் இழந்துட்டாங்க …

ஹைதராபாத் அணிக்கு எதிரான சூப்பர் ஓவரில் கொல்கத்தா அணி அசத்தல் வெற்றியை பெற்றது.

கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து கொல்கத்தா அணி சார்பில் மோர்கனின் இறுதி நேர போராட்டத்தால் ஹைதராபாத் அணிக்கு 164 ரன்கள் இலக்காக கொல்கத்தா அணி வழங்கியது.

164 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய ஹைதராபாத் அணி நிர்ணயிக்க பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் அடித்து போட்டியை சமன் செய்தது.எனவே யார் வெற்றி என்ற முடிவில் இரு அணிகளையும் சூப்பர் ஓவர் விளையாட அழைக்கப்பட்டது.

சூப்பர் ஓவர்:

ஹைதராபாத் அணி சார்பில் தொடக்க வீரர்களாக கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பேரிஸ்டவ் களம் இறங்கினர்.

பெர்குசன் வீசிய சூப்பர் ஓவர் பந்துகள் முறையில் பின்வருமாறு:

முதல் பந்து – டேவிட் வார்னர் (கிளீன் போல்ட் )

2 ம் பந்து – சமத்(2 ரன்)

3 ம் பந்து – சமத் (கிளீன் போல்ட்)

சூப்பர் ஓவர் விதிப்படி அந்த ஓவரில் 2 விக்கெட் இழந்தால் மொத்த அணியும் அவுட்டாக கருதப்படும் ,

3 ரன்கள் என்ற இலக்குடன் கொல்கத்தா அணி சார்பில் தொடக்க வீரர்களாக கேப்டன் மோர்கன் மற்றும் தினேஷ் கார்த்திக் களம் இறங்கினர்.

ரசித் கான் வீசிய சூப்பர் ஓவர் பந்துகள் முறையில் பின்வருமாறு:

முதல் பந்து – மோர்கன் ( ரன் இல்லை )

2ம் பந்து – மோர்கன் (1 ரன் )

3 ம் பந்து – தினேஷ் கார்த்திக் (ரன் இல்லை)

4 ம் பந்து – தினேஷ் கார்த்திக் (2 ரன்கள்)

2 பந்துகள் மீதம் வைத்து கொல்கத்தா அணி 3 ரன்கள் எடுத்து சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

Exit mobile version