வந்துட்டேனு சொல்லு… திரும்ப வந்துட்டேனு.. மீண்டும் பந்தாவாய் களத்தில் குதிக்கும் நரைன்..

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐ.பி.எல் அணி வீரரும், மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரருமான சுனில் நரைன் பந்துவீசுவதற்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக கலக்கி வருபவர் சுனில் நரைன். இவர் கடந்த வாரம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக பந்து வீசும்போது, அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக நடுவர்கள் புகார் அளித்தனர்.

புகார் அளிக்கப்பட்டாலும் தொடர்ந்து பந்து வீசலாம், ஆனால் இன்னொரு முறை புகார் அளிக்கப்பட்டால் தொடர் முழுவதும் பந்து வீச இயலாது என கே.கே.ஆர் அணி நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, கொல்கத்தா அணி அதற்குப்பின் அவரை களம் இறக்காமல், சுனில் நரைன் பந்து வீச்சை ஆய்வு செய்ய வேண்டுகோள் விடுத்தது.

அதன்படி அவரது பந்து வீச்சை ஐ.பி.எல் கமிட்டி தீவிரமாக ஆய்வு செய்தது, அப்போது முழங்கை ஐ.பி.எல் விதிமுறையை தாண்டி அதிக டிகிரியாக வளையவில்லை என்று தெரிவித்தது. இதனால் சுனில் நரைன் தொடர்ந்து பந்து வீச அனுமதிக்கப்பட்டுள்ளார். பந்துவீச கிரீன் சிக்னல் கிடைத்துள்ளதால் நரைன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Exit mobile version