ட்ரீம் லெவன் ஐ.பி.எல்லில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்தது..

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்தது.

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்தது. அதன் பிறகு பேட்டிங்கில் ஆட இறங்கிய டெல்லி அணிக்கு பிரித்திவி சா,ஷிகர் தவான் தொடக்க ஆட்ட காரர்களாக களம் இறங்கினர்.ஆரம்பம் முதலே தடுமாறிய தவான் சமி வீசிய 2 வது ஓவேரில் 1 ரன்னுக்கு ஆசைப்பட்டு தேவையில்லாத ரன் அவுட் ஆனார்.அடுத்து களம் இறங்கிய ஹெட்மயர் வந்த இரண்டாவது பாலில் தூக்கி அடிக்க கிருஷ்ணப்பா கெளதம் தவறவிட்டார்.பிரித்திவி சாவும் பெரிதாக நிலைக்கவில்லை அவரும் சமி வீசிய பௌன்சர் பால்லில் அவுட்டானர். ஹெட்மயரும் அதே ஓவரில் வெளியேற டெல்லி அணி 4 ஓவர் முடிவில் 13 ரன்களுக்கு 3 விக்கெட் எடுத்து தடுமாறியது.

பொறுப்புடன் நிலைத்து நின்ற கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பண்ட் ஆகியோர் கெளதம் வீசிய 9 வது ஓவரில் அடுத்தது இரண்டு சிக்ஸர்க்களை பறக்கவிட்டு 45 ரன்களை டெல்லி அணி கடந்தது.13 வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை ஐயர் பறக்கவிட..80 ரன்களை தொட்டது டெல்லி அணி .14 வது ஓவரில் இந்திய இளம் வீரர் ரவி பிஸ்னோய் பண்ட்டை 31 ரன்களில் வெளியேற்ற,அதற்கு அடுத்த ஓவரில் சமி வீசிய பால்லில் கேப்டன் ஐயரும் 32 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஜோர்டனிடன் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து பேட்டிங் பிடிக்க இறங்கிய அக்சார் பட்டேல் 17வது ஓவரில் காட்ரெல் பால்லில் கீப்பர் ராகுல் கைகளில் 6 ரன்கள் அடித்து அவுட் ஆனார். அதன் பிறகு ஆஸ்திரேலிய வீரர் ஸ்டோனிஸ் அடித்த சிக்ஸ் டெல்லி அணி 100 கடக்க உதவியது.இந்திய வீரர் அஸ்வின் ஓரளவு ஸ்டோனிக்ஸ் தட்டி கொடுக்க..மறுமுனையில் ஸ்டோனிக்ஸ் பௌண்டரிகளை பறக்க விட்டு கொண்டு இருந்தார்.அஸ்வின் காட்ரெல் போட்ட பந்தில் வெளியேறினார்.ஜோர்டன் வீசிய 20 வது ஓவர் முதல் பந்திலேயே ஸ்டோனிக்ஸ் சிக்ஸர் அடித்து,அடுத்தது 3 பௌண்டரிகளை ஓட விட்டார்.19.5 பந்தில் ஒரு சிக்ஸர் அடித்து தனது அரை சதத்தை கடந்து அணியையும் 150 க்கு மேல் கொண்டு சென்றார்.ஜோர்டன் வீசிய கடைசி பால் நோ பால் ஆக அமைய ஸ்டோனிஸ் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.இறுதியில் டெல்லி அணி 20 ஓவர் ,முடிவுக்கு 157 ரன்களுக்கு 8 விக்கெட் எடுத்து இருந்தது.

பஞ்சாப் அணி பொறுத்த வரை அதிகபட்சமாக முகமது சமி 3 விக்கெட்களும்,காட்ரெல் 2 விக்கெட்,ரவி பிஸ்னோய் ஒரு விக்கெட் எடுத்து இருந்தனர்.

Exit mobile version