அகர்வால் சதம்,கே.எல்.ராகுல் அரை சதம் :ராஜஸ்தான் அணிக்கு 224 ரன்கள் இமாலய இலக்கு

அகர்வால் சதம்,கே.எல்.ராகுல் அரை சதத்தால்,ராஜஸ்தான் அணிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 224 ரன்கள் இமாலய இலக்காக வழங்கியது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து பஞ்சாப் அணி சார்பில் கே.எல்.ராகுல் மற்றும் அகர்வால் தொடக்கம் தந்தனர்.ஆரம்பம் முதலே இருவரும் பௌண்டரி,சிக்ஸர்க்களை நொறுக்கி தள்ளினார்.4 வது ஓவர் வீசிய ஆர்ச்சர் பந்தில் ஹாட்ரிக் பௌண்டரி அடித்து ராகுல் அசத்த,மறுமுனையில் அகர்வாலும் அடுத்த ஓவர் வீசிய ராஜ்புட் ஓவரில் 2 பௌண்டரி அடித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4.3 ஓவரில் 50 ரன்களை கடக்க உதவி செய்தார்.

அதிரடியாய் விளையாடிய ராகுல் மற்றும் அகர்வால் இருவரும் அடுத்த இரு ஓவர்களில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மித வேகத்தில் ரன் எண்ணிக்கை நகர்ந்தது.ராகுல் திவாதியா வீசிய 8 வது ஓவரில் தொடர்ந்து 2 சிக்ஸர்,ஒரு பௌண்டரி ஓட விட்டார்.அடுத்த ஓவரிலும் அகர்வால் கோபால் பந்தில் 2 சிக்ஸர் அடித்து 50 ரன்களை கடந்து, பஞ்சாப் அணியும் 100 ரன்களை 8.4 ஓவரில் கடக்க உதவினார்.10 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 110 ரன்களை எடுத்து இருந்தது.மறுமுனையில் கே.எல்.ராகுல் டாம் கர்ர்ன் வீசிய 12 வது ஓவரில் ஒரு சிக்ஸர்,ஒரு பௌண்டரி அடித்து அவரும் அரை சதத்தை கடந்தார்.தொடர்ந்து இருவரும் நான்கு புறமும் பந்துகளை தெறிக்க விட,13.2 ஓவர்களில் பஞ்சாப் அணி 150 ரன்களை தொட்டது.

தொடர்ந்து அதிரடி காட்டிய அகர்வால் 45 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அசத்த,15 ஓவர் முடிவில் 173 ரன்கள் பஞ்சாப் அணி பெற்று இருந்தது,டாம் கர்ர்ன் வீசிய 17 வது ஓவரில் அகர்வால்(50 பந்துகள் 106 ரன்கள்) ஒரு பௌண்டரி அடித்து அடுத்த பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.அடுத்து களம் இறங்கிய மேக்ஸ்வல் தன் பங்கிற்கு ராஜ்புட் பந்தில் 2 பௌண்டரிக்களை ஓட விட,அதே ஓவரில் பஞ்சாப் கேப்டன் ராகுல் (54 பந்துகள்,69 ரன்கள்) சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து கேட்ச் கொடுத்து வெளியேறினார்.அடுத்து வந்த பூரன் டாம் கர்ர்ன் வீசிய 19 வது ஓவரில் ஒரு சிக்ஸர் அடிக்க,கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 223 ரன்கள் அடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 224 ரன்கள் இலக்காக வழங்கியது.

Exit mobile version