இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 19 முறை தோல்வியை சந்தித்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றியுடன் தொடரை தொடங்க விரும்புவதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். கோப்பையை இரண்டு முறை கைப்பற்றி சாதனைப் படைத்த அணிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஒன்று. கடந்த சீசனில் முதல் ஆறு போட்டிகளில் ஐந்தில் வெற்றி வாகை சூடிய கொல்கத்தா அணி கடைசி 7 போட்டிகளில் மூன்றில் கூட வெற்றி பெற முடியாமல் போனது.
வாழ்வா? சாவா? என்ற போட்டிகளில் மும்பை உள்பட பல அணிகளிடம் தோல்வியை சந்தித்து பிளே-ஆஃப் சுற்றை இழந்தது.இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தாவின் சாதனை மிகவும் மோசமாக உள்ளது. 25 முறை நேருக்கு நேர் மோதியதில் 6 முறை மட்டுமே வெற்றி பெற்று,19 முறை தோல்வியை சந்தித்துள்ளது,
இன்று கொல்கத்தா நைட் ரைடஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ள நேரத்தில் ,இக்கட்டான நிலையில் மோதுவதை விட முதல் போட்டியிலேயே சந்திப்பது மகிழ்ச்சியே என்று கே.கே.ஆர் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.