போச்சுக்கல் கிராண்ட் பிரி கார் பந்தயத்தில் கலந்துகொண்ட ஹாமில்டன் பட்டம் வென்று சாதித்துள்ளார்.
உலக அளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட தொடர் கிராண்பிரி கார்பந்தயம். இந்தத் தொடர் எந்த நாட்டில் நடைபெற்றாலும் இதற்கான நேரடிப்பார்வையாளர்களும் சரி, தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலும் சரி ரசிகர்களினால் டிஆர்பி ரேட்டிங் எகிறும்.
இந்நிலையில், போச்சுக்கல் நாட்டில் உள்ள அல்கர்வ் என்ற பகுதியில் இந்த ஆண்டுக்கான கிராண்ட்பிரி கார் -2020 கார் பந்தயம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல கார் பந்தய வீரர் ஹாமில்டன் முதலிடத்தில் வந்து வெற்றிப் பெற்றுப் பட்டம் வென்றார்.
எனவே அவர் அதிகப் போட்டிகளில் பட்டம் வென்ற என்ற சாதனையைப் படைத்தார்.
மெர்சிடஸ் அணி வீரர் ஹாமில்டன் சுமார் 306 கிமீட்டர் கொண்ட பந்தய தூரத்தை ஹாமில்டன் வெறும் 1 மணி நேரம் 16 நிமிடம் 65 வினாடிகளில் கடந்து வெற்றி பெற்றார்.
இதன் மூலம் அதிகப் போட்டிகளில் வெற்றி பெற்றவர் என்ற மைக்கேல் சூமேக்கரின் சாதனையை( 92முறை ) முறியடித்துள்ளார்.
உலக சாதன படைத்துள்ள ஹாமில்டனுக்கு சக வீரர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டுகளும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.