ஐ.பி.எல் தொடரில் மீண்டும் ஒரு மைல் கல்:எம்.எஸ்.டோனி புதிய சாதனை

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ஐ.பி.எல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை எம்.எஸ்.டோனி படைக்க உள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி .ஏறக்குறைய எல்லாத் தொடர்களிலும் பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறி மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு அதிக முறை முன்னேறியதன் மூலம் சென்னை அணி மற்ற அணிகளை விட அதிக போட்டிகளில் விளையாடி உள்ளது.

2008 ல் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்.எஸ்.டோனி விளையாடி வருகிறார். இவருடன் தொடர்ந்து ரெய்னாவும் விளையாடி வருகிறார்.சுரேஷ் ரெய்னா இந்த சீசனில் இருந்து சொந்த வேலை காரணமாக வெளியேறியுள்ளார்.

சுரேஷ் ரெய்னா ஐ.பி.எல் தொடரில் 192 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதுதான் ஐ.பி.எல். தொடரில் ஒரு வீரர் விளையாடிய அதிகப்பட்ச போட்டியாக காணப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 3வது போட்டியில் கேப்டன் எம்.எஸ்.டோனி விளையாடியபோது 192 போட்டிகளில் விளையாடி சமன் செய்திருந்தார்.
இன்றைய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் 193 போட்டிகளில் விளையாடி, அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை எம்.எஸ்.டோனி படைக்க இருக்கிறார்.

Exit mobile version