“யார்க்கரில் மிரட்டும் நடராஜன்”குவியும் முன்னாள் வீரர்களின் பாராட்டு

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணிக்கு எதிராக சிறப்பாக யார்க்கரில் மிரட்டிய நடராஜனுக்கு முன்னாள் வீரர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
natarajan cricket player

அபுதாபி:

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் டெல்லி கேப்பிட்டல்சுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் ஸ்டம்பை குறி வைத்து யார்க்கராக போட்டு மிரட்டினார். குறிப்பாக அவர் தனது கடைசி இரு ஓவர்களில் (அணியின் 14 மற்றும் 18-வது ஓவர்) மட்டும் துல்லியமாக 10 யார்க்கர்களை வீசி திணறடித்தார்.

ஐதராபாத் அணியின் வெற்றியில் அவரது பந்து வீச்சும் முக்கிய பங்கு வகித்தது. அவரை பாராட்டியுள்ள இந்திய முன்னாள் வீரர் ஷேவாக், ‘நடராஜனின் பந்து வீச்சை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. கடைசி கட்டத்தில் மிகச்சிறப்பான முறையில் நேர்த்தியாக யார்க்கர் வீசினார்’ என்றார். ‘அற்புதம் நடராஜன்’ என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட்லீ தனது டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்துள்ளார்.

Exit mobile version