மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிக்களிலும் இந்திய அணியில் சஞ்சு சாம்சனை சேர்க்காதது ஏன் என்று ஷேன் வார்னே கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் ஷேன் வார்னே தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக உள்ளார். சென்னை அணிக்கு எதிராக அபாரமாக செயல் பட்ட ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சனை அவர் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக ஷேன் வார்னே கூறியதாவது:-
சஞ்சு சாம்சன் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். அவரை இந்திய அணியில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் சேர்க்காதது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் கிரிக்கெட் ஆடும் நளினம் அபாரமாக இருக்கிறது. அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி ராஜஸ்தான் அணிக்கு ஐ.பி.எல். கோப்பையை பெற்றுக் கொடுப்பார் என்று நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.