பேரிஸ்டவ் அரைசதம் :டெல்லி அணிக்கு 162 ரன்கள் இலக்கு

பேரிஸ்டவ் அரை சதத்தால் டெல்லி அணிக்கு 162 ரன்கள் இலக்காக ஹைதராபாத் அணி வழங்கியது.

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து ஹைதராபாத் அணியின் சார்பாக கேப்டன் வார்னர்,பேரிஸ்டவ் களம் இறங்கினர்.இஷாந்த் சர்மா வீசிய முதல் ஓவரில் இருவரும் பௌண்டரிகள் அடிக்காமலே 9 ரன்கள் எடுக்க,அடுத்து ஓவர் ரபடா பந்தில் வார்னர் ஒரு பௌண்டரி அடித்து சிறப்பான தொடக்கம் தந்தார்.தொடர்ந்து டெல்லி அணி சிறப்பாக பந்து வீச ஹைதராபாத் அணி 6 ஓவர்களில் 38 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.

மிஸ்ரா வீசிய 7 வது ஓவரில் பேரிஸ்டவ் ஒரு சிக்ஸர் அடித்து அசத்த ஹைதராபாத் அணியின் ஸ்கோர் மெல்ல நகர தொடங்கி 50 ரன்களை கடந்தது.அதன் பிறகு வார்னர் மறுமுனையில் அடிக்க ஆரம்பிக்க,மிஸ்ரா வீசிய 10 வது ஓவரில் வார்னர்(45 ரன்கள்,33 பந்துகள்) விக்கெட் கீப்பர் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.அதே ஓவரில் பேரிஸ்டவ் ஒரு பௌண்டரி ஓட விட ஹைதராபாத் அணி 10 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்து இருந்தது.அடுத்து வந்த மனிஷ் பாண்டேவும் 3 ரன்னில் மிஸ்ரா பந்தில் வெளியேற,வில்லியம்சன் களம் இறங்கி தட்டி ஆட ஹைதராபாத் அணி 13.1 வது ஓவரில் 100 ரன்களை கடந்தது. 16 வது ஓவர் வீசிய நோர்கியா பந்தில் வில்லியம்சன் தொடர்ந்து இரண்டு பௌண்டரிகள் அடித்து நொறுக்க,ஹைதராபாத் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து இருந்தது.வில்லியம்சன் தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்தி ஸ்டாய்னிஸ் பந்திலும் 2 பௌண்டரிகள் அடித்து அசத்தினார்

.மறுமுனையில் பேரிஸ்டவ் 44 பந்துகளில் 50 ரன்களை கடக்க,ரபடா வீசிய அதே ஓவரில் பேரிஸ்டவ் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.நோர்கியா வீசிய 19 வது ஓவரில் புதிதாக களம் இறங்கிய சமத் ஒரு பௌண்டரி,ஒரு சிக்ஸர் அடித்து ஹைதராபாத் அணி 150 ரன்கள் கடக்க உதவி செய்தார்.ரபடா வீசிய கடைசி ஓவரில் வில்லியம்சன் (41 ரன்கள்,26 பந்துகள்) தூக்கி அடிக்க பார்த்து அவுட் ஆகி வெளியேறினார்.20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 162 ரன்கள் அடித்து டெல்லி அணிக்கு 163 ரன்கள் இலக்காக கொடுத்தது.

Exit mobile version